March 5, 2017
மத்திய அமைச்சருடன் பேச்சுவார்த்தை தோல்வி! போராட்டம் தொடரும் - நெடுவாசல் போராட்ட குழு !
ஹைட்ரோகார்பன் எரிவாயு எடுக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகம் மற்றும் புதுவையைச் சேர்ந்த மக்கள் புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் தொடர்ந்து 17 நாளாக போராடி வருகின்றனர். இந்நிலையில் நேற்று மதுரையில் பொன்.ராதாகிருஷ்ணன்,தமிழிசை சவுந்திரராஜன், மற்றும் ஓ.என்.ஜி.சி அதிகாரிகள் போராட்டக் குழுவினரோடு பேச்சுவார்த்தை நடத்தினர்.
மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுடன் நடத்திய பேச்சுவார்த்தை திருப்தி அளிக்கவில்லை என தெரிவித்த நெடுவாசல் போராட்டக் குழுவினர், தங்களது போராட்டம் தொடரும் என்றும் அறிவித்தனர். இதனிடையே, ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, புதுக்கோட்டை நெடுவாசலில் பொதுமக்கள் நடத்தி வரும் போராட்டம் இன்று 18-வது நாளை எட்டியுள்ளது.
மத்திய அமைச்சருடன் பேச்சுவார்த்தை தோல்வி! போராட்டம் தொடரும் - நெடுவாசல் போராட்ட குழு !
Reviewed by மறத்தமிழன்
on
March 05, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
March 05, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.