March 6, 2017
ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தில் மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நெடுவாசல் கிராமத்தில் 19வது நாளாக போராட்டம் நடந்து வருகிறது.
இந்த நிலையில், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. நெடுவாசல் பாசன சங்கம் சார்பில் மதிமுக ஒன்றிய செயலாளர் செல்வராஜ் என்பவர் தொடர்ந்துள்ளார்.
அதில், நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் மற்றும் ஷேல்ஸ் போன்ற எந்த திட்டங்களுக்கும் அனுமதி அளிக்கக் கூடாது என்று கூறப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை நாளை நடைபெறும் என்று நீதிபதிகள் அறிவித்து உள்ளனர்.
ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு
Reviewed by மறத்தமிழன்
on
March 06, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
March 06, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.