Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

March 1, 2017

மேற்கு வங்காளம்: குழந்தைகள் கடத்தி விற்பனை பா.ஜ.க. மகளிரணி தலைவி கைது !!


மேற்கு வங்காளம் மாநிலம் - நேபாளம் எல்லைப்பகுதியில் குழந்தைகளை கடத்தி விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்ட ஒரு கும்பலை சேர்ந்த மூன்று பேரை மேற்கு வங்காளம் மாநில போலீசார் சமீபத்தில் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் ஒருவயது முதல் 14 வயதுக்குட்பட்ட 17 குழந்தைகளை கடத்தி விற்பனை செய்தது தெரியவந்தது.

கொல்கத்தா நகரின் புறநகர் பகுதியான பேஹாலா மற்றும் வடக்கு 24-வது பர்கானா மாவட்டம் சேர்ந்த சில நர்சிங் ஹோம் மற்றும் வீடுகளில் சி.ஐ.டி, போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, இந்த தொழிலுக்காகவே தொண்டு நிறுவனம் என்ற பெயரில் குழந்தைகளை கடத்தி வெளிநாட்டில் உள்ளவர்களுக்கு விற்றுவந்த சோனாலி மொண்டல், சந்தனா சக்ரபார்த்தி, மனாஸ் போவ்மிக் ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

வெளிநாட்டை சேர்ந்தவர்களுக்கு அனாதை குழந்தைகளை தத்து கொடுப்பதுபோல் போலியாக ஆவணங்களை தயாரித்து, பல இடங்களில் இருந்து கடத்தி வரப்பட்ட 17 குழந்தைகளை இவர்கள் விலைக்கு விற்ற தகவல் விசாரணையில் அம்பலமானது.
இந்நிலையில், இவர்களுக்கு உடந்தையாக குற்றச்சாட்டின் பேரில் நேபாளம் - மேற்கு வங்காளம் மாநிலம் எல்லைப்பகுதி அருகே வசித்துவரும் பா.ஜ.க. மகளிரணி தலைவி ஜுஹி சவுத்ரி என்பவரை நேற்றிரவு போலீசார் கைது செய்துள்ளனர்.

மேலும் பல பா.ஜ.க பிரமுகர்களுக்கு தொடர்பு இருப்பதாக போலிஸார் விசாரித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.