March 7, 2017
நாய் வாலை நிமித்த முடியாது என்பதற்கு இதுவே சான்று.. சிங்கள கடற்படையின் தாக்குதல் குறித்து திருமா
நாய் வாலை நிமித்த முடியாது என்பதற்கு இலங்கை கடற்படையின் இந்த கொலைவெறித்தாக்குதலே சான்று என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இலங்கை கடற்படை தமிழக மீனவர்கள் மீது நடத்திய துப்பாக்கிச்சூட்டுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார். நாய் வாலை நிமித்த முடியாது என்பது இலங்கை கடற்படையின் இந்த கொலை வெறித்தாக்குதலே சான்று என்றும் அவர் கூறியுள்ளார்.
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் தங்கச்சிமடத்தை சேர்ந்த 22 வயது மீனவர் பரிதாபதான கொல்லப்பட்டார். இலங்கை கடற்படையின் இந்த அத்துமீறிய தாக்குலுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழர்களுக்கு எதிரான ராஜபக்சே அரசு தூக்கியெறியப்பட்டு தமிழக மக்கள் ஆதரவோடு சிறிசேனா அரசு பதவியேற்றப் பிறகும் தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் தொடர்கிறது.
காங்கிரஸ் ஆட்சியில்தான் இலங்கை அரசுக்கு ஆதரவு அளிக்கப்படுவதாக கூறி பாஜக ஆட்சிக்கு மக்கள் ஆதரவு தெரிவித்தனர். ஆனால் இங்கேயும் தமிழர்களுக்கு எதிரான நிலை தான் உள்ளது.
இலங்கை கடற்படையின் இந்த தாக்குதல் மூலம் நாய் வாலை நிமித்த முடியாது என்பது உறுதியாகியுள்ளது. இவ்வாறு திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசினார்.
நாய் வாலை நிமித்த முடியாது என்பதற்கு இதுவே சான்று.. சிங்கள கடற்படையின் தாக்குதல் குறித்து திருமா
Reviewed by மறத்தமிழன்
on
March 07, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
March 07, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.