March 12, 2017
போராட்டத்தை திசை திருப்ப முயற்சி- வாபஸ் இல்லை.. நாளை உண்ணாவிரதம்.. மீனவர்கள் திட்டவட்டம்!!
தங்கச்சிமிடத்தில் போராட்டம் முடிவு பெறவில்லை என மீனவர்கள் சங்கத் தலைவர் எமரால்டு தெரிவித்துள்ளார்.
தங்கச்சிமிடத்தில் போராட்டம் முடிவு பெறவில்லை என மீனவர்கள் சங்கத் தலைவர் எமரால்டு தெரிவித்துள்ளார். நாளை அறிவித்தப்படி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்றும் அவர் கூறினார்.
தங்கச்சிமடத்தை சேர்ந்த பிரிட்ஜோ என்ற 22 வயதான மீனவர் சிங்கள கடற்படையால் சுட்டுக்கொல்லப்பட்டதைக் கண்டித்து அப்பகுதி மீனவர்கள் 6வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களை தமிழக அரசியல் தலைவர்களும் மத்திய அமைச்சர்களும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் மீனவர்களின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டதாக இன்று தகவல் வெளியானது. இதனை போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மீனவர்கள் மறுத்துள்ளனர். இதுதொடர்பாக பேசிய மீனவர்கள் சங்கத் தலைவர் எமரால்டு போராட்டம் இன்னும் முடிவு பெறவில்லை தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது என்றார்.
அறவழியில் அமைதியாகப் போராட்டம் நடைபெறுவதாக அவர் கூறினார். போராட்டத்தை திசைத்திருப்ப முயற்சிகள் நடைபெற்று வருவதாக கூறிய அவர் நாளை அறிவித்தப்படி உண்ணாவிரதம் நடைபெறும் என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.
போராட்டத்தை திசை திருப்ப முயற்சி- வாபஸ் இல்லை.. நாளை உண்ணாவிரதம்.. மீனவர்கள் திட்டவட்டம்!!
Reviewed by மறத்தமிழன்
on
March 12, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
March 12, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.