March 8, 2017
மீனவர்கள் மீதான துப்பாக்கி சூட்டிற்கு இலங்கை கடற்படை மீண்டும் மறுப்பு
மீனவர்கள் மீதான துப்பாக்கி சூட்டிற்கு இலங்கை கடற்படை மீண்டும் மறுப்பு தெரிவித்து உள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் மீன்பிடி தளத்தில் இருந்து 6-ந்தேதி கடலுக்கு சென்ற மீனவர்கள் பாக் வளைகுடாவில் மீன்பிடித்துக் கொண்டு இருந்தனர். அன்று இரவு அங்குவந்த இலங்கை கடற்படையினர் எவ்வித அறிவிப்பும் இன்றி மீனவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த பிரிட்ஜோ என்ற மீனவர் அந்த இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த சரோன் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவத்தை கண்டித்து மாநிலம் முழுவதும் மீனவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
பல்வேறு தரப்பில் இருந்து கடும் கண்டனம் எழுந்து உள்ளநிலையில் இலங்கை தொடர்ந்து துப்பாக்கி சூடு நடத்தவில்லை என மறுத்து வருகிறது.
மீனவர்கள் மீதான துப்பாக்கி சூட்டிற்கு இலங்கை கடற்படை மீண்டும் மறுப்பு தெரிவித்து உள்ளது. தளபதியின் கட்டளையை மீறி எந்தஒரு வீரரும் துப்பாக்கியை பயன்படுத்த மாட்டார்கள் என இலங்கை கடற்படை கூறிஉள்ளது. எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக இதுவரையில் 85 மீனவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர் என்றும் மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 146 படகுகள் தங்கள் வசம் உள்ளது என்றும் இலங்கை கடற்படை தெரிவித்து உள்ளது.
மீனவர்கள் மீதான துப்பாக்கி சூட்டிற்கு இலங்கை கடற்படை மீண்டும் மறுப்பு
Reviewed by மறத்தமிழன்
on
March 08, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
March 08, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.