March 6, 2017
தொடர்ந்து பறிக்கப்படும் தமிழனின் உரிமை! மீனவர்கள் எடுத்த அதிரடி முடிவு! கச்சத்தீவு மீட்கப்படுகிறது?
ஒரு பக்கம் ஹைட்ரோ கார்பனுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், சத்தமில்லாமல் தமிழக மீனவர்களை வேட்டையாடி வருகிறது இலங்கை அரசு.
சனிக்கிழமை 24 தமிழக மீனவர்கள் இலங்கை அரசு கைது செய்தது. இந்நிலையில் வரும் 11 மற்றம் 12 ஆம் தேதிகளில் நடைபெற உள்ள கச்சத்தீவு புனித அந்தோணியர் கோவில் திருவிழாவை புறக்கணிக்க உள்ளதாக மீனவர்கள் அறிவித்துள்ளனர்.
மேலும் வரும் 7 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர். இலங்கை சிறைகளில் தற்போது 85 தமிழக மீனவர்கள் வாடி வருகின்றனர்.
தமிழக மீனவர்களின் 128 படகுகள் சிறைபிடித்து வைக்கப்பட்டுள்ளன. இதனை விடுவிக்கக் கோரித் தான் இந்த போராட்டம் தொடங்குகிறது. வழக்கமாக மீனவர்கள் சிறிது நாட்கள் போராட்டம் நடத்துவார்கள். பின்னர் ஓய்ந்து விடும்.
ஆனால் இந்த முறை கச்சத்தீவை மீட்கும் வரை தொடரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக மக்களும், இளைஞர்களும் ஆதரவு கொடுத்தால் வெற்றி நிச்சயம்.
தொடர்ந்து பறிக்கப்படும் தமிழனின் உரிமை! மீனவர்கள் எடுத்த அதிரடி முடிவு! கச்சத்தீவு மீட்கப்படுகிறது?
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
March 06, 2017
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
March 06, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.