March 1, 2017
நெடுவாசலில் கடும் போராட்டம் நடைபெறும் நிலையில் நெல் வயல்களில் குருடாயில் குழாய்கள் புதுப்பிக்கும் பணி நாகையில் தீவிரம்
புதுகை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ள நிலையில் நாகை மாவட்டத்தல் வயல்களுக்கு மத்தியில் குரூடாயில் கொண்டு செல்லும் குழாய்கள் புதுப்பிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. நாகை, திருவாரூர் மாவட்டத்தில் நிலத்தடியில் பெட்ரோலிய பொருட்கள் (குருடாயில்) இருப்பதாக ஆய்வு மேற்கொள்ளப் பட்டு 1985 ம் ஆண்டு திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர் அருகே ஆமூர், திருத்துறைப்பூண்டி அருகே களப்பால், நாகை மாவட்டம் கீழ்வேளூரைஅடுத்த இலுப்பூர் போன்ற பகுதியில் எண்ணை கிணறுகள் அமைக்க துரப்பணப் பணிகள் மேற்கொள்ளப் பட்டது. அதைத் தொடர்ந்து நாகை மாவட்டத்தில் கீழ்வேளூரை அடுத்த ஓர்குடி, கடம்பங்குடி மற்றும் சீர்காழி, கொள்ளிடம், குத்தாலம் போன்ற பகுதியில் எண்ணைக் கிணறு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதேப் போல் திருவாரூர் மாவட்டத்தில் அடியக்கமங்கலம், கருப்பூர், விளமல் போன்ற பல்வேறு பகுதியில் எண்ணை கிணறுகள் அமைக்கப் பட்டு வருகிறது.
காவிரி டெல்டாவில் எண்ணை கிணறு அமைக்கும் பணிக்கு காவிரி படுகை திட்டம் என்று பெயரிட்டுதிட்டம் தொடங்கப் பட்டுள்ளது. காவிரி டெல்டா பகுதி பெரும்பாலான பகுதி விளை நிலம் என்பதால் எண்ணை கிணறு அமைக்க தொடக்கத்தில் 20 ஏக்கர் நிலம் கையகப் படுத்தப் பட்டு பணிகள் மேற்கொள்ளப் பட்டு தற்போது 5 ஏக்கர் நிலப் பரப்பில் பணிகள் நடைபெற்று வருகிறது. கையகப் படுத்தப் பட்ட விளை நிலத்தில் மண் கொண்டு நிரப்பி அந்த இடத்தில் எண்ணை கிணறு அமைக்கும் பணி நடைபெறும். ஒரு இடத்தில் எண்ணை கிணறு அமைக்க சுமார் 2,500 மீட்டர் முதல் 4,000 மீட்டர் ஆழம் வரை துரப்பண பணி மேற்கொள்ளப் படும். பூமிக்கு அடியில் உள்ள பொட்ரோலியப் பொருட்கள் (குருடாயில்), எரிவாயு இரண்டும் தானாகவே வெளியே வரும், சில இடங்களில் பம்பிங் செய்து எடுக்கப் படுகிறது. ஆரம்பத்தில் எண்ணை கிணறு அருகிேலயே தொட்டி அமைத்து குருடாயில்கள் சேமிக்கப் பட்டு லாரிகள் மூலம் சுத்தகரிப்பு நிலையத்திற்கு அனுப்பப் படும்.
தற்போது நாகை மாவட்டம் நாகூரை அடுத்த நரிமணம் பனங்குடியில் சி.பி.சி.எல். எண்ணை சுத்தகரிப்பு நிலையம் அமைக்கப் பட்டதால் நாகை மாவட்டம் கீழ்வேளூர் பகுதியில் ஓர்குடியில் கத்திரிபடுகை, ஓர்குடி மெயின்ரோடு, மஞ்சவாடி, அகரவேலி, பூலாங்குடி ஆகிய இடங்களில் தலா இரண்டு எண்ணை கிணறுகளும், பிள்ளைத்திடல், மூத்திதிடலில் தலா ஒரு எண்ணை கிணறுகள் அமைக்கப் பட்டுள்ளது. இந்த எண்ணை கிணறுகளில் இருந்து பெறப் படும் குருடாயில்கள் குழாய் மூலம் கடம்பங்குடி என்ற இடத்தில் சேமிக்கப் பட்டு அங்கிருந்து குழய் மூலம் பனங்குடி சி.பி.சி.எல். எண்ணை சுத்தகரிப்பு நிலையத்திற்கு அனுப்பப் படுகிறது. அதேப் போல் திருவாரூர் மாவட்டம் அடியக்க மங்கலம், கருப்பூர், விளமல் போன்ற பகுதியில் கிடைக்கும் குருடாயில்களை குழாய் மூலம் பனங்குடி எண்ணை சுத்தகரிப்பு நிலையத்திற்கு அனுப்பப்படுகிறது. திருவாரூர் மாவட்டத்தில் இருந்த பனங்குடி சி.பி.சி.எல். எண்ணை சுத்தகரிப்பு நிலையத்திற்கு குழாய் கீழ்வேளூர் பகுதியான வடக்குவெளி கிராமம் வழியாக கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் குழாய் சுமார் 5 அடி ஆழத்தில் பதிக்கப் பட்டுள்ளது.
இந்த குழாய் சேதம் ஏற்பட்டு கடந்த 2012ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் குழாயில் இருந்து குருடாயில்கள் வெளியேறி விளை நிலங்களில் பரவி நெற் பயிர்கள் பாதிக்கப் பட்டது. இதையடுத்து பழைய குழாய்களுக்கு பதில் புதிய குழாய் அமைக்குப் பணி நடைபெற்று வருகிறது.
ஏற்கனவே மன்னார்குடி பகுதியில் மீத்தேன் எரிவாயு திட்டப் பணி தொடங்குவதாக அறிவிக்கப் பட்ட நிலையில் விவசாயிகள், பொது மக்கள், அரசியல் கட்சியின் எதிர்ப்பு காரணமாக திட்டத்தை கைவிடுவதாக மத்திய அரசு அறிவித்தது. இந் நிலையில் மத்திய அரசு புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் பகுதியில் ஹைட்ரோ கார்ப்பன் திட்டம் தொடங்குவதாக அறிவித்த நிலையில் இந்த திட்டத்தை எதிர்த்து காவிரி டெல்டா உள்ளிட்ட தமிழகம் முழுவதும் எதிர்ப்பு கிளம்பி தற்போது பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந் நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள எண்ணை கிணறுகளில் இருந்து எடுக்கப் படும் குருடாயில்களை எடுத்துச் செல்லும் குழாய்களை புதுப்பிக்கும் பணி விளை நிலப் பகுதியில்நடைபெற்று வருவது அப் பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெடுவாசலில் கடும் போராட்டம் நடைபெறும் நிலையில் நெல் வயல்களில் குருடாயில் குழாய்கள் புதுப்பிக்கும் பணி நாகையில் தீவிரம்
Reviewed by மறத்தமிழன்
on
March 01, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
March 01, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.