Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

March 18, 2017

உத்தரபிரதேச முதல்வராகிறார் யோகி ஆதித்யநாத்! பாஜக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் தேர்வு


யோகி ஆதித்யநாத், தீவிர வலதுசாரி இந்துத்துவா சிந்தனை கொண்டவர். சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டு வந்தவர். அவர் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச முதல்வராக யோகி ஆதித்யநாத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது லோக்சபா எம்.பியாக உள்ளார்.
ஐந்து மாநிலங்களுக்கு நடந்த சட்டசபை தேர்தல் களில், உத்தரபிரதேசத்தில் பாஜக மொத்தமுள்ள, 403 தொகுதிகளில், பாஜக 312 தொகுதிகளிலும், அதன் கூட்டணி கட்சிகள், 12 தொகுதிகளிலும் வென்றுள்ளன.

தனது இந்துத்துவா கொள்கை, அயோத்தி ராமர் கோவில் கனவில் மேலும் உறுதியாக இருப்பதையே பாஜக இப்படி மறைமுகமாக வெளிப்படுத்தியிருப்பதாகவும் கருதப்படுகிறது.

கோரக்பூர் லோக்சபா தொகுதியிலிருந்து 5 முறை லோக்சபாவுக்குத் தேர்வானவர் யோகி ஆதித்யநாத். சர்ச்சைக்குரிய பல கருத்துக்களை கூறி பரபரப்புகளை ஏற்படுத்தியவர். இவர் நாட்டின் மிகப் பெரிய மாநிலத்தின் முதல்வராகியிருப்பது பல முனுமுனுப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.