Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

March 4, 2017

பள்ளிகளில் மாணவர்கள் மதிய உணவு சாப்பிட ஆதார் அட்டை கட்டாயம் மத்திய அரசு அறிவிப்பு !


பள்ளிகளில் மதிய உணவு சாப்பிடும் மாணவர்களின் ஆதார் எண்களை பதிவு செய்வது கட்டாயம் என்று மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

இந்தியா முழுவதும் பள்ளிகளில் மாணவர்கள் மதிய உணவு சாப்பிட தங்களுடைய ஆதார் எண்களை கொடுக்க வேண்டும், இதற்கான அறிவிப்பை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் கடந்த பிப்ரவரி மாதம் இறுதியில் பிறப்பித்து உள்ளது.

நாடு முழுவதும் அரசு பள்ளிகளில் மதிய உணவு வழங்கப்படுகிறது. ஏழை மாணவ - மாணவிகள் பள்ளிகளிலேயே மதிய உணவு சாப்பிடுகிறார்கள். இதனால் பள்ளிகளுக்கு மாணவர்கள் வருகை அதிகரித்துள்ளது. மதிய உணவு சாப்பிடும் மாணவர்கள் தங்களது ஆதார் எண்களை பள்ளி களில் பதிவு செய்ய வேண்டும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்து உள்ளது. இது தொடர்பான அறிவிக்கை மத்திய அரசின் கெஜட்டில் வெளியிடப்பட்டு உள்ளது.

இதே போல் சமையலர்கள், உதவியாளர்களும் ஆதார் எண்களை பதிவு செய்ய வேண்டும் என்று உத்தர விடப்பட்டு உள்ளது.

 ஆதார் அட்டை இல்லாதவர்கள் புதிதாக விண்ணப்பித்து ஆதார் அட்டை பெற்றுக் கொண்டு வருகிற ஜூன் மாதம் 30-ந்தேதிக்குள் ஆதார் எண்ணை பள்ளிகளில் பதிவு செய்ய வேண்டும் என்றும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மதிய உணவு திட்டத்தில் சில இடங்களில் முறைகேடுகளில் ஈடுபடுகிறார்கள். மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரித்து அதற்கான உணவுப் பொருட்களை பெற்றுக் கொண்டு குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களுக்கு வழங்குவதாக புகார்கள் வந்தன. மேலும் பல மாணவர்கள் வீட்டில் இருந்து மதிய உணவு கொண்டு வந்து விடுகிறார்கள். அவர்களுக்கும் மதிய உணவு வழங்குவதாக கணக்கிடப்படுகிறது.

எனவே இது போன்ற முறைகேடுகளை தடுக்கவே ஆதார் அட்டை கட்டாயம் என உத்தரவிடப்பட்டுள்ளதாக மத்திய அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.