Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

March 6, 2017

ஜெ.வுக்கு அளித்த சிகிச்சைகள் என்ன.. எய்ம்ஸ் டாக்டர்கள் அறிக்கை அளித்தனர்..!!


தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த வருடம் செப்டம்பர் 22ம் தேதி உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி கடந்த டிசம்பர் 5ம் தேதி உயிரிழந்தார்.

அவரது சாவில் மர்மம் உள்ளதாக பல்வேறு தரப்பினர் சந்தேகம் எழுப்பி வருகின்றனர். முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம் தனது ஆதரவாளர்களுடன் போராட்டம் நடத்தி வருகிறார்.
இந்த நிலையில், அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதாவுக்கு கில்னானி தலைமையிலான டாக்டர்கள் குழு சிகிச்சை அளித்தனர். அக்டோபர் 5ம் தேதி முதல் டிசம்பர் மாதம் வரை 5 முறை எய்ம்ஸ் டாக்டர்கள் குழு  சிசிச்சை அளித்து இருந்தது.

ஜெயலலிதாவுக்கு எய்ம்ஸ் டாக்டர்கள் அளித்த சிகிச்சை குறித்து தமிழக அரசு அறிக்கை கேட்டிருந்தது. இதனை ஏற்ற எய்ம்ஸ் டாக்டர்கள் குழு தமிழக அரசிடம் அறிக்கை அளித்துள்ளது. டெல்லியில் சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணனிடம் எய்ம்ஸ் துணை இயக்குனர் ஸ்ரீனிவாஸ் இன்று அளித்தார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.