Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

March 8, 2017

கண்கள் மற்றும் கல்லீரல் தொடர்பான தொந்தரவுகளில் இருந்து எளிதில் விடுபட உத்திகள்!


ஒருமுறை கண்ணாடி அணிந்தால், பிறகு கண்ணாடியைக் கழற்ற வழியே இல்லையா?

பல வழிகள் இருக்கிறது.

‘கண்களைக் காக்கும் யோகா’ பதிவில் சொல்கின்ற கண் சிமிட்டுதல் மற்றும் மூக்கின் நுனியினை பார்த்தல் புருவமத்தியைப் பார்த்தல் என்பவற்றுடன் கீழே கொடுக்கப்பட்டுள்ள உத்திகளையும் செய்து வந்தால்
கண் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு மட்டுமல்ல கல்லீரல் சம்மந்தப்பட்ட நோய்களையும் குணப்படுத்தலாம்.

கண்கள் மற்றும் கல்லீரல் தொடர்பான தொந்தரவுகளில் இருந்து எளிதில் விடுபட உத்திகள்!

கண்களைக் காக்கும் யோகா!

கண்களில் ஏதேனும் பிரச்சனை வந்தால், மருத்துவரைப் பார்த்து, கண்ணாடி அணிந்து கொள்கிறோம். பிரச்சனை சரியானதும் கண்ணாடியைக் கழட்டிவிட வேண்டும் தானே? ஆனால், ஒருமுறை கண்ணாடி அணிந்தால், அதையே தொடர்கிறோமே ஏன்? ஒருமுறை அணிந்தால், கண்ணாடியைக் கழற்ற வழியே இல்லையா?

கண்ணாடி ஏன் அணிகிறோம்?

கண்ணின் முன்பக்கத்தில் இருந்து, பின்பக்கம் வரை அதாவது, கருவிழியில் இருந்து விழித்திரை வரை இருக்கும் விட்டத்தை `ஆக்ஸியல் லென்த்’ (Axial length) என்பார்கள். பிறக்கும்போது 17 mm இருக்கும் விட்டம், பெரியவர்கள் ஆகும்போது 22.5 mm வரை அதிகரிக்கும். சிலருக்கு 24 மி.மீ வரைகூட இருக்கும். 22.5 mm என்ற இந்த சராசரி அளவைவிட அதிகமாகவோ, குறைவாகவோ இருந்தால், பார்வை சரியாகத் தெரியாது. ‘ஆக்ஸியல் லென்த்’ குறைவாக இருப்பவர்களுக்குக் கிட்டப் பார்வையிலும், அதிகமாக இருப்பவர்களுக்குத் தூரப் பார்வையிலும் பிரச்சனை இருக்கும். தூரப் பார்வை உள்ளவர்களுக்கு குவிவு வில்லைகளும் Convex lens, கிட்டப் பார்வை உள்ளவர்களுக்கு குழிவு வில்லைகளும் Concave lens பார்வைக் கோளாறைச் சரிசெய்யத் தரப்படும்.

கண்ணாடி போட்டுக்கொண்டால், பார்வைக் கோளாறு சரியாகிவிடுமா?

கண்ணாடி போடுவதால், நிச்சயம் பார்வைக் கோளாறு சரியாகாது. நாம் பார்க்கும் பொருளின் பிம்பம், கண்ணில் இருக்கும் லென்ஸ் வழியாக விழித்திரையில் விழும். விழித்திரையில் விழும் இந்த பிம்பம், மூளைக்குச் சென்று பதிந்த பிறகுதான், நாம் அந்தப் பிம்பத்தைப் பார்க்கிறோம். கருவிழிக்கும் விழித்திரைக்குமான இடைவெளி அதிகமாக இருந்தாலோ, குறைவாக இருந்தாலோ, நாம் பார்க்கும் பிம்பம் சரியாக விழித்திரையில் விழாது.

கண்ணாடி அணிவதன் மூலம், கருவிழி வழியாகச் செல்லும் பிம்பமானது, சரியாக விழித்திரைக்குச் சென்றடைய உதவும். ஆனால், கண்ணின் முன் பக்கத்துக்கும் பின் பக்கத்துக்கும் இடையில் இருக்கும் இடைவெளியைக் கண்ணாடி குறைக்கவோ, அதிகரிக்கவோ செய்யாது.

ஒருமுறை கண்ணாடி அணிந்தால், பிறகு கண்ணாடியைக் கழற்ற வழியே இல்லையா?

பல வழிகள் இருக்கிறது. அதில் ஒரு வழிமுறையை இன்று பார்ப்போம்.

கண்களுக்கான யோகா 1

நிமிர்ந்து நேராக உட்கார வேண்டும். வலது கையில் கட்டை விரலைத் தவிர மற்ற விரல்களை மடக்கி, பார்வைக்கு நேராக உயர்த்தி, கட்டைவிரலைப் பார்க்க வேண்டும். நம் பார்வை, கட்டை விரலில் நிலைத்திருக்க வேண்டும். கையை மெதுவாக வலப்புறம் நகர்த்த வேண்டும். கையை நகர்த்தும்போது, விழிகள் மட்டும் கையோடு சேர்ந்து நகர வேண்டும். தலையைத் திருப்பக் கூடாது. கழுத்து, முதுகு, நேராக இருப்பது அவசியம். கட்டை விரலைத் தெளிவாகப் பார்க்கக்கூடிய தூரம் வரை மட்டுமே கையை நகர்த்தவும். சிறிது நேரம் அப்படியே வைத்திருக்கவும். பிறகு, கையை அப்படியே பழைய நிலைக்குக் கொண்டுவரவும். இதை, ஐந்து முறை செய்ய வேண்டும். பயிற்சி செய்யும்போது, கண்களைச் சிமிட்டக் கூடாது. இதேபோல கை பெருவிரலை இடது பக்கம் நகர்த்தி செய்ய வேண்டும்.

கண்களுக்கான யோகா 2

நிமிர்ந்து நேராக உட்கார வேண்டும். கட்டை விரலைத் தவிர மற்ற விரல்களை மடக்கி, வலது கையைப் பார்வைக்கு நேராக உயர்த்தி, கட்டை விரலைப் பார்க்க வேண்டும். இப்போது, கையை மேலே உயர்த்த வேண்டும். உயர்த்தும்போது கருவிழிகள் மட்டும் கையோடு சேர்ந்து நகர வேண்டும். சிறிது நேரம் அப்படியே வைத்திருக்கவும். பிறகு, கையை பழைய நிலைக்குக் கொண்டுவரவும். கட்டை விரலைப் பார்த்தபடி கையைக் கீழே கொண்டுசெல்ல வேண்டும்.

கண்களுக்கான யோகா 3

நேராக உட்கார்ந்து, மூக்கின் நுனியை உற்று நோக்கவும். கண்களோ, தலையோ வலிப்பது போன்று இருந்தால், கொஞ்சம் ஓய்வு எடுத்துவிட்டுத் தொடரலாம். பிறகு, கண்களை மூடி ஓய்வெடுக்கவும்.

கண்களுக்கான யோகா 4

நிமிர்ந்து உட்கார்ந்து கண்களை 10 முதல் 20 முறை சிமிட்டவும். பிறகு, கண்களைத் திறந்து நேராகப் பார்க்கவும். இடது கண் விழியை வலது பக்கமும், வலது கண் விழியை இடது பக்கமும் கொண்டுவந்து பயிற்சி செய்யவும். அதன் பிறகு, கைகளை தேய்த்து கண்களில் வைத்துக்கொள்ளவும். மீண்டும் 10- 20 முறை கண்களைச் சிமிட்டவும்.

‘கண்களைக் காக்கும் யோகா’ பதிவில் சொல்கின்ற கண் சிமிட்டுதல் மற்றும் மூக்கின் நுனியினை பார்த்தல் புருவமத்தியைப் பார்த்தல் என்பவற்றுடன் கீழே கொடுக்கப்பட்டுள்ள உத்திகளையும் செய்து வந்தால்
கண் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு மட்டுமல்ல கல்லீரல் சம்மந்தப்பட்ட நோய்களையும் குணப்படுத்தலாம்.

குணப்படுத்தக்கூடிய நோய்கள்:

# கிட்டப்பார்வை,

# தூரப்பார்வை,

# குளுக்கோமா Glucoma,

# கண்ணில் புரை Cataracts,

# கண்ணுள் அழுத்தம் அதிகரித்தல் Eye Pressure,

# கண் உலர்தல் Dry eyes

போன்ற கண் சம்பந்தப்பட்ட நோய்கள் மற்றும்

# கல்லீரல் வீக்கம் Fatty liver,

# மஞ்சட்காமாலை Jaundice,

# மூத்திரப் பை கற்கள் Gall bladder stone,

# Hepatitis B

போன்ற கல்லீரல் சம்பந்தப்பட்ட நோய்கள்.

அந்த எளிய உத்திகளாவன:

# மேலே குறிப்பிட்ட நோய்கள் இருக்கும்போது மட்டும் தினமும் காலையில் வெறும் வயிற்றில் இரண்டு நெட்டு கீழாநெல்லி இலைகளை நன்றாக மென்று சாப்பிட வேண்டும். (கீழ்காய் நெல்லிக் காயுடனும் சாப்பிடலாம்.)

# தினமும் 5முறை பச்சைத் தண்ணீரில் கண்களை திறந்து வைத்துக்கொண்டு கழுவுதல் வேண்டும்.

# தினமும் ஒரு கரட்டை பச்சையாக (சமைக்காமல்) நன்றாக மென்று (வாயிலே அரைத்துச்) சாப்பிட வேண்டும்.

# இரவு 10 மணிக்குள் தூங்க முயற்ச்சிக்கவும். இரவு 11 மணி – 3 மணி வரை ஆழ்ந்த உறக்கத்தில் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். ஏனென்றால் அந்த நேரத்தில் தான் நம் கல்லீரலும் பிதப்பையும் உடம்பிலுள்ள இரசாயண கழிவுகளை முழுவீச்சில் வெளியேற்றும்.

# புகைபழக்கம், ரசாயன கொசு விரட்டிகள் போன்றவற்றை தவிர்த்துவிட்டு இயற்கை காற்றோட்டம் உள்ள இடத்தில் தூங்க வேண்டும்.

# பால் கலந்த டீ, பால் கலந்த காபி, செயற்கை குளிர்பானங்கள் குடிப்பதை தவிர்க்க வேண்டும்.

# அலாரம் வைத்து எழுந்திருப்பதை தவிர்க்க வேண்டும்.

# உடல் அசதியாக இருக்கும்போது போதிய ஓய்வும் தூக்கம் வரும்போது தூங்குவதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்.

நன்றி – விகடன் மற்றும் ஹீலர் பாஸ்கர்

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.