Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

March 12, 2017

அப்போலோ மர்மம் “எனக்கு தெரியும், ஆனா காட்டிக் கொடுக்க மாட்டேன்”- எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம்


அதிமுக தலைமை அலுவலகத்தில் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் எம்பி நிருபர்களிடம் கூறியதாவது,
ஜெயலலிதா மரணம் குறித்து பல்வேறு சர்ச்சைகள் வெளிவருகிறது. அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதாவுக்கு 18 பேர் கொண்ட டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர்.
2வது நாள் அரசு சார்பில் கண்காணிப்பு குழுவும் அமைக்கப்பட்டது. திடீரென சர்க்கரை அளவு அதிகமானதால் எய்ம்ஸ் டாக்டர்கள் சிகிச்சைக்காக அழைக்கப்பட்டனர். அவர்கள் சிகிச்சையில் திருப்தி இல்லாததால் லண்டனில் இருந்து டாக்டர் ரிச்சர்ட் பீலே வந்து சிகிச்சை அளித்தார்.
அது மட்டுமல்லாமல் வேலூர் சிஎம்சி, பெங்களூர், ஐதராபாத், மும்பையில் இருந்தும் டாக்டர்கள் வந்து சிகிச்சை அளித்தனர்.
ஒரு கட்டத்தில் அமெரிக்கா நியூயார்க்கில் உலக பிரசித்திபெற்ற ஜான்ஹாபின் மருத்துவமனை டாக்டருடன் வீடியோ கான்பரன்சிங் மூலமும் ஜெயலலிதா சிகிச்சை குறித்து விவாதிக்கப்பட்டது.
5ம் தேதி ஜெயலலிதாவின் இதயம், நரம்பு, மூளை செயலிழந்ததால் இரவு 11 மணி அளவில் ஜெயலலிதா மரணம் அடைந்தார். இதுதான் உண்மையில் நடந்தது.
ஜெயலலிதா சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்தபோதே அனைத்து பொறுப்புகளையும் ஓபிஎஸ் வசம் ஒப்படைக்கப்பட்டு விட்டது. அவர் நினைத்தால் சென்று பார்த்திருக்கலாம்.
ஆனால், அவர் தனியாக ஒரு அறையில் இருந்து கொண்டு அவருக்கு வேண்டியவர்களை மட்டும் அழைத்து பேசினார். சிகிச்சையில் இருந்த ஜெயலலிதாவை அதிகாரிகள் சென்று பார்த்தனர்.
அவர்கள் பெயரை வெளியிட முடியாது. அப்படி வெளியிட்டால் அவர்களை காட்டிக்கொடுத்த மாதிரி ஆகிவிடும்.
இவ்வாறு கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.