Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

March 3, 2017

‘அண்ணன் எங்களை மன்னிச்சுடுங்க’ 64 எம்.எல்.ஏ.க்கள் பன்னீரிடம் தஞ்சம் ? சசி குரூப் அதிர்ச்சி!


சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்ற பின், எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக நியமிக்கப்பட்டார். சட்டமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் 122 எம்.எல்.ஏ.க்க ஆதரவுடன் எடப்பாடி அரசு வெற்றி பெற்றது.
இதற்கிடையே நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு முன், சசி ஆதரவு எம்.எல்.ஏ,க்களை கூவத்தூர் விடுதியில் தங்க வைத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது சசிகலா பினாமி அரசாக செயல்படும் எடப்பாடி அரசை எதிர்த்து 64 எம்.எல்.ஏ.க்கள் பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு தெரிவிக்க தயாராக இருப்பதாக கூறப்படுகிறது.
முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ.வான பாலகங்காதரன் கூறுகையில், அதிமுகவின் அடிமட்ட தொண்டன் யாரும் சசிகலாவை ஏற்றுக் கொள்ளவில்லை. ஜெயலலிதாவால் விரட்டப்பட்டவர்கள் இன்று அதிமுகவை அழிக்கும் செயலில் இறங்கியுள்ளதாக கூறியுள்ளார்.
மேலும், கூவத்தூரில் அடைத்து வைக்கப்பட்டிருந்த எம்.எல்.ஏ.க்களின் வாயை பணத்தால் அடைத்தனர்.
ஆனால் அவர்களில் 64 எம்.எல்.ஏ.,க்கள் ஜெயலலிதாவிற்கு செய்த துரோகத்தை எண்ணி மன சாட்சி உறுத்துவதாக தொடர்ந்து எங்களிடம் அலைபேசியில் பேசி வருகின்றனர்.
அவர்கள் விரைவில் ஜெ.வின் உண்மை விசுவாசியான பன்னீர்செல்வத்திடம் இணைய தயாராக உள்ளனர். விரைவில் கட்சியை சட்டரீதியாக கைப்பற்றுவோம்” என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.