March 2, 2017
சொகுசு கார்களின் உரிமையாளர்களுக்கு ஐடி நோட்டீஸ்... 6-ஆம் தேதி ஆஜராக உத்தரவு
சென்னை கிழக்குக் கடற்கரை சாலையில் பலகோடி மதிப்பிலான 10 பந்தயக் கார்களை பறிமுதல் செய்த வழக்கில் அவற்றின் உரிமையாளர்களிடம் விளக்கம் கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சென்னை கானத்தூர் போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட பல கோடி மதிப்பிலான 10 சொகுசு கார்கள் குறித்து விளக்கம் கேட்டு அதன் உரிமையாளர்களுக்கு வருமான வரி துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
புதுச்சேரியில் கார் பந்தயத்தில் கலந்து கொள்வதற்காக சென்னை கிழக்கு கடற்கரைச் சாலை நோக்கி 150 கி.மீ. வேகத்தில் 20-க்கும் மேற்பட்ட சொகுசு கார்கள் ஞாயிற்றுக்கிழமை சீறி பாய்ந்தன. அப்போது வாகனத் தணிக்கையில் இருந்த போலீஸார் அந்த கார்களை தடுக்க முயன்றனர். அதை மீறி நிற்காமல் போனதால் போக்குவரத்து காவல் ஆய்வாளர் சவுந்திரராஜனின் கால் மீது லேசாக உரசியதில் அவர் காயம் அடைந்தார்.
தகவலறிந்த கானத்தூர் போலீஸார் அந்தக் கார்களை சுங்கச்சாவடியில் மடக்கிப் பிடித்தனர். இதையடுத்து 10 கார்களையும் பறிமுதல் செய்த போலீஸார் அதை ஓட்டியவர்களை கானத்தூர் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
இதில் கார் ரேஸ் நடத்தியவர்கள் ஸ்ரீசாத், விக்னேஸ்வரன், கிஷால், சங்கர், பிரசன்னா, ராகவேந்திரன், கரன், ராஜகோபால், எஸ்காணி என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் அனைவரும் சென்னையில் உள்ள பெரும்புள்ளிகளின் மகன்கள் என்பது தெரியவந்தது.
இந்நிலையில் கார்களின் வடிவமைப்பில் ஏதேனும் சட்டத் திட்டங்கள் மீறப்பட்டிருக்கின்றனவா என்பதை தெரிந்து கொள்ள மோட்டார் வாகன ஆய்வுக்கு உத்தரவிடப்பட்டது. கானாத்தூர் காவல்நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ள கார்களில் அதிகாரிகளின் ஆய்வு முடிந்தது.
இதைத் தொடர்ந்து 10 கார்களையும் உரிமையாளர்களிடம் ஒப்படைக்க போலீஸ் ஏற்பாடு செய்துள்ளது. மேலும் வேகமாக சென்ற வழக்கில் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட கார்களின் மதிப்பு பல கோடிகள் இருக்கும் என்பதால் அவை குறித்து விளக்கம் கேட்டு அதன் உரிமையாளர்களுக்கு வருமான வரித் துறை நோட்டீஸ்
அனுப்பியுள்ளது. வரும் 6-ஆம் தேதி சென்னை வருமான வரித் துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
சொகுசு கார்களின் உரிமையாளர்களுக்கு ஐடி நோட்டீஸ்... 6-ஆம் தேதி ஆஜராக உத்தரவு
Reviewed by மறத்தமிழன்
on
March 02, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
March 02, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.