Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

March 2, 2017

மோடியின் மார்பளவு 56 இஞ்ச் என்பது உண்மையானால் விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்யட்டும்: ராகுல் சவால்


மோடியின் மார்பளவு 56 இஞ்ச் என்பது உண்மையானால் அவர் விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்யட்டும் என, காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி மோடிக்கு சவால் விட்டுள்ளார்.

உத்தரப்பிரதேசத்தில் சட்டசபை தேர்தல் நடந்து வருகிறது. இதுவரை 5 கட்ட தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளன. இன்னும் 2 கட்ட தேர்தல்கள் மீதம் உள்ளன. இதனால் அங்கு தேர்தல் பிரச்சாரம் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், உத்தரபிரதேச மாநிலம் மஹராஜ்கஞ்சில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி தனது கட்சி வேட்பாளர்களை ஆதரித்துப் பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

மோடி வாக்குறுதிகளை மட்டுமே தருகிறார். ஆனால் நாங்கள் வேலை செய்கிறோம். மோடி அளிக்கும் வாக்குறுதிகள் இளைஞர்கள் வேலைவாய்ப்பு விஷயத்தில் பொய்யாகிப் போகின்றன.மோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை உறுதி செய்ய வேண்டும். இல்லையென்றால் 2019-ம் ஆண்டு மோடியை மீண்டும் குஜராத்துக்கே அவர்கள் அனுப்பி விடுவர்.

நான் சவால் விடுகிறேன். மோடியின் மார்பளவு 56 இஞ்ச் என்பது உண்மையானால், அவர் உ.பி. விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்யட்டும். உண்மையிலேயே அவர் விவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என நினைத்தால், உடனடியாக அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டி அனைத்து விவசாயிகளின் கடன்களையும் தள்ளுபடி செய்ய உத்தரவு பிறப்பிக்க வேண்டும். அதனை விடுத்து உத்தர பிரதேசத்தில் பா.ஜ.க ஆட்சி அமைக்கும் வரை ஏன் காத்திருக்க வேண்டும்?

இவ்வாறு அவர் பேசினார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.