March 4, 2017
அ.தி.மு.க கவுன்சிலருக்கு 3.78 கோடி ரூபாய் சொத்து! ஐ.டி விசாரணை
2015 -ம் ஆண்டு சென்னை வெள்ளத்தின்போது கவுன்சிலர் என்ற முறையில் அண்ணாமலை தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்று, 196-வது வார்டு பகுதியைச் சேர்ந்த பொன் தங்கவேல் தொடர்ந்த வழக்கில், தற்போது திருப்புமுனை ஏற்பட்டுள்ளது.
சென்னை ஈஞ்சம்பாக்கம் அதிமுக கவுன்சிலர் அண்ணாமலைக்கு 3.78 கோடி ரூபாய் சொத்துகள் உள்ளதாக, பொன் தங்கவேல் தொடர்ந்த வழக்கில், வருமான வரித்துறை பதில் அளித்துள்ளது. ஆனால், மாநகராட்சி வேட்பு மனுவில், தமக்கு சொத்து இல்லை என அண்ணாமலை ஏற்கெனவே கூறியிருந்தார்.
அண்ணாமலைக்கு அதிக சொத்து இருப்பதாக தங்கவேலு என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். உயர்நீதிமன்ற உத்தரவின்படி வருமான வரித்துறை அதிகாரிகள், கவுன்சிலர் அண்ணாமலையிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அ.தி.மு.க கவுன்சிலருக்கு 3.78 கோடி ரூபாய் சொத்து! ஐ.டி விசாரணை
Reviewed by மறத்தமிழன்
on
March 04, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
March 04, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.