Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

March 25, 2017

டெல்லியில் பரபரப்பு.. மரத்தில் ஏறி போராடிய 2 விவசாயிகள்.. பெரும் போராட்டத்திற்குப் பின் இறங்கினர்!


அகிலன் கல்லூரி மாணவர், ரமேஷ் விவசாயி. இருவரது குடும்பமுமே விவசாய நசிவால் கஷ்டப்படுவதால் இந்த முடிவை எடுக்க துணிந்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

டெல்லி: மரத்தில் ஏறி தற்கொலைக்கு முயன்ற இளைஞர்கள் இருவரையும் பார்த்து கையெடுத்து கும்பிட்டு கெஞ்சி கேட்டார் விஷால்.
விவசாயிகள் பிரச்சினைக்காக டெல்லி ஜந்தர் மந்தரில் தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தினர். இதில் பங்கேற்ற ரமேஷ் மற்றும் அகிலன் ஆகியோர் இன்று மதியம் திடீரென மரத்தின் மீது ஏறி கீழே குதித்து தற்கொலை செய்யப்போவதாக கூறினர்.

விவசாயிகளின் மரணத்தை தடுக்க வலியுறுத்தி சென்னையில் இளைஞர்கள்..
அப்போது அங்கு நடிகர் விஷால், இயக்குநர் பாண்டியராஜன் ஆகியோரும் உடனிருந்தனர். பதற்றமடைந்த விஷால், கையெடுத்து கும்பிட்டு இளைஞர்களை கீழே இறங்குமாறு கேட்டுக்கொண்டார். போராட்டமே கெட்டுவிடும், தயவு செய்து கீழே இறங்குங்கள், ரெண்டில் ஒன்று பார்த்துவிடலாம் என்றெல்லாம் விஷால் கூறினார்.
சுமார் 10 நிமிட நேரம் கெஞ்சிய பிறகு இரு இளைஞர்களும் கீழே இறங்கினர். அப்போதுதான் தீயணைப்பு துறை வாகனம் அங்கு வந்து சேர்ந்தது. அவர்களை திருப்பியனுப்பினர் விவசாயிகள்.

அகிலன் கல்லூரி மாணவர், ரமேஷ் விவசாயி. இருவரது குடும்பமுமே விவசாய நசிவால் கஷ்டப்படுவதால் இந்த முடிவை எடுக்க துணிந்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கீழே இறங்கிய இளைஞர்களை விஷாலும் பிறரும் சேர்ந்து சமாதானப்படுத்தினர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.