Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

March 6, 2017

276 ரன்களில் சுருண்டது ஆஸ்திரேலியா..! ஜடேஜா 6 விக்கெட்


பெங்களூர் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 276 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது.
இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி பெங்களூர் சின்னசாமி  மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது.
இதில் டாஸ் வென்று  முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து களமிறங்கிய இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரரான கே.எல் ராகுலை தவிர மற்ற அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களில் வெளியேறவே 189 ரன்களுக்கே இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
அதனை a40 ரன்கள் எடுத்திருந்தது. வார்னர் (23), ரென்ஷா (15) அவுட்டாகாமல் இருந்தனர்.
அதனை தொடர்ந்து நேற்றைய இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் அஸ்வினின் சுழலில் சிக்கி வார்னர்(33) விக்கெட்டை இழந்தாலும் மற்றொரு துவக்க வீரரான ரென்ஷாவுடன் ஜோடி சேர்ந்த அந்த அணியின் கேப்டன் ஸ்மித் இந்திய பந்துவீச்சாளர்களின் பொறுமையை நீண்ட நேரம் சோதித்த அந்த அணியின் கேப்டன் ஸ்மித் 52 பந்துகளுக்கு 8 ரன்கள் எடுத்திருந்தபோது ஜடேஜாவின் பந்தில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
இந்தியாவின் பொறுமையை சோதித்து பார்த்த ஸ்மித்தை அவுட்டாக்கி விட்டோம் என்று இந்திய வீரர்கள் சந்தோசப்பட முடியாத அளவிற்கு ஸ்மித்தை தொடர்ந்து ஜோடி சேர்ந்த ரென்ஷா – சேன் மார்ஷ் கூட்டணி கிட்டத்தட்ட 3 மணி நேரத்திற்கும் மேலாக இந்திய அணியின் பந்துவீச்சை அலட்டிகொள்ளாமல் எதிர்கொண்டது.
ஒருவழியாக 196 பந்துகளுக்கு 60 ரன்கள் எடுத்திருந்தபோது ஜடேஜா சுழலில் சிக்கி ரென்ஷா விக்கெட்டை இழந்தார். தொடர்ந்து பொறுமையாக விளையாடிய சேன் மார்ஷ் 197 பந்துகளில் 66 ரன்கள் எடுத்து வெளியேறவே நேற்றைய இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில்  ஆஸ்திரேலிய அணி 237 ரன்கள் எடுத்திருந்தது.
48 ரன்கள் முன்னிலையிலுடன் இன்றைய மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 276 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
பந்துவீச்சில் இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக ஜடேஜா 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
அதனை தொடர்ந்து 87 ரன்கள் பின்தங்கிய நிலையில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸை விளையாடி வருகிறது

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.