March 2, 2017
பிளஸ் 2 தேர்வுக்கு 15நிமிடம் தாமதமாக வந்தால் அனுமதி இல்லை! மாணவர்கள் உஷார்
இன்று பிளஸ் 2 தேர்வு துவங்குகிறது. தேர்வு எழுதும் மாணவர்கள் 15 நிமிடத்திற்கு மேல் தாமதமாக வந்தால் தேர்வுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதற்கான விதிமுறைகளை, சுற்றறிக்கையாக ஆசிரியர்களுக்கு தேர்வுத்துறை அனுப்பியுள்ளது.
அதில், மாணவர்கள் குறித்த நேரத்திற்கு தேர்வு அறைக்கு வர வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது. காலணிக்கு தடை, பிளஸ் 2 தேர்வு அறைக்குள், மாணவர்கள் தங்கள் உடைமைகளை கொண்டு செல்லக்கூடாது.
தேர்வு அறை முன்பும் வைத்திருக்கக்கூடாது. தேர்வு மைய வளாகத்தில் ஒதுக்கப்பட்ட அறைகளில் உடைமைகளை வைக்கலாம்
தேர்வு அறைக்கு அலைபேசி மற்றும் தடை செய்யப்பட்ட எலக்ட்ரானிக் பொருட்களை கொண்டு வரக் கூடாது. பிட் அடித்தல், காப்பி அடித்தல் போன்ற ஒழுங்கீனங்களில் ஈடுபடும் மாணவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.
தேர்வு அறைக்குள் காலணிகள் அணிந்து வரக்கூடாது. காலணிகளை வெளியே கழற்றி வைத்த பிறகே, தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்படுவர். தேர்வு அறைக்கு, 15 நிமிடம் அல்லது அதற்கு மேல் தாமதமாக வரும் மாணவர்கள் தேர்வு எழுத அனுமதி கிடையாது. இவ்வாறு தேர்வுத்துறை அனுப்பிய சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிளஸ் 2 தேர்வுக்கு 15நிமிடம் தாமதமாக வந்தால் அனுமதி இல்லை! மாணவர்கள் உஷார்
Reviewed by மறத்தமிழன்
on
March 02, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
March 02, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.