March 7, 2017
இம்மி அளவு கூட கசியாமல் எப்படி..?? போயஸ் கார்டனில் 128 சிசிடிவி கேமராக்கள் இருந்தும் மரணம் மர்மம்..!
ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், அவரது மரணம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும்.
என்பதனை வலியுறுத்தி நாளை (8ம் தேதி) மாவட்ட தலைநகரங்களில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுக அணியினர் உண்ணாவிரத போராட்டம் நடத்துகின்றனர்.
இதுதொடர்பான ஆலோசனை கூட்டம் கோவில்பட்டியில் நடந்தது.
முன்னாள் எம்எல்ஏ மார்க்கண்டேயன் தலைமை வகித்து பேசுகையில்,”சமீபகாலமாக சாதாரணமான வீடுகளில் கூட சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
ஆனால் ஒரு கட்சியின் பொதுச்செயலாளர், முதல்வர் என உயர்ந்த பொறுப்பு வகித்து வந்த ஜெயலலிதா வசித்த வீட்டில் 128 சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டிருந்ததும் அவரது மரண மர்மம் வெளிச்சத்திற்கு வராதது ஏன்?
அவரை போயஸ் கார்டன் இல்ல வீட்டில் வைத்து கீழே தள்ளிவிட்டு பின்னர் அப்போலோ மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
உண்மையான அதிமுக விசுவாசிகள் மட்டுமல்ல தமிழக மக்களிடம் கூட ஜெயலலிதா மரணம் குறித்து சந்தேகம் இருந்து வருகிறது என்றார்
இம்மி அளவு கூட கசியாமல் எப்படி..?? போயஸ் கார்டனில் 128 சிசிடிவி கேமராக்கள் இருந்தும் மரணம் மர்மம்..!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
March 07, 2017
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
March 07, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.