March 5, 2017
வறட்சியால் இரு நாளில் 110 பேர் பலி - நெடுவாசலை காக்காவிட்டால் இதான் நிலையா?
சோமாலியா நாட்டில் கடும் பஞ்சம் நிலவி வருகிறது. இங்கு கடந்த 48 மணி நேரத்தில் மட்டும் 110க்கும் அதிகமானோர் உணவு இல்லாததாலும், நோய் தொற்றாலும் இறந்துள்ளதாக யுனிசெப் தெரிவித்துள்ளது.
சோமாலியா நாட்டில் தண்ணீர் இல்லததால் விவசாயம் முற்றிலும் அழிந்து போயுள்ளது. மேலும் நாட்டின் பொருளாதாரம் பாதாளத்துக்கு சென்றுள்ளது. இந்நாட்டில் நிலவும் கடும் பஞ்சத்தால் கடந்த பிப்ரவரி மாதத்தில் மட்டும் 2,70,000 குழந்தைகள் சரியான ஊட்டச்சத்து இல்லாமல் இருப்பதாக சர்வதேச குழந்தைகள் அவசர நிதி அமைப்பு (யுனிசெப்) அறிவித்துள்ளது.
இந்நாட்டில் பஞ்சத்தின் காரணமாகவும், சுகாதாரம் இன்மை காரணமாகவும் பலருக்கும் காலரா, வயிற்றுப்போக்கு போன்ற நோய்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த 48 மணி நேரத்தில் மட்டும் 110க்கும் அதிகமானோர் இறந்துள்ளதாக அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது.
கடந்த 2011ம் ஆண்டிலும் இதே போல ஏற்பட்ட கடும் பஞ்சத்தினால் 2,60,000 மக்கள் பறிதாபமாக உயிரிழந்தனர்.
தமிழகத்திலும் தண்ணீர் பற்றாக்குறை வருடாவருடம் அதிகரித்து வருகின்றது. அதுமட்டுமில்லாமல் மீதேன் திட்டம், ஹைட்ரோ கார்பன் திட்டம், வெளிநாட்டு குளிர்பான கம்பெனிகளுக்கு தண்ணீர் கொடுத்தல் என மக்களுக்கு விரோதமான செயலை அரசு ஊக்குவித்து வருகின்றது. இதனால் தமிழகம் மட்டுமில்லாமல் இந்தியாவும் கடும் தண்ணீர் பஞ்சம் மற்றும் உணவு பஞ்சத்தை விரைவில் எதிர்கொள்ள வேண்டிய சூழல் உருவாகிவருகிறது.c
வறட்சியால் இரு நாளில் 110 பேர் பலி - நெடுவாசலை காக்காவிட்டால் இதான் நிலையா?
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
March 05, 2017
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
March 05, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.