Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

February 23, 2017

தமிழர்களை அடி முட்டாளாக்கும் WHATS APP செய்திகள் : எச்சரிக்கை


ஜனகண மன பாடல் யுனெஸ்கோவால் சிறந்த தேசிய கீதமாக அங்கீகரிக்கப்பட்டது
தவறான தகவல்
பீமன் மகனான கடோத்கஜனின் நிஜமான எலும்புக் கூடு கண்டுபிடிக்கப்பட்டது அது சினிமா செட்..
குளிர்பானத்தில் எய்ட்ஸ் நோயாளியின் ரத்தம் பரவிவிட்டது..! இந்த முறையில் எய்ட்ஸ் பரவாது. குளிர்பானங்கள் முழுவதும்  இயந்திரத்தில்  உற்பத்தி செய்யப்படுகிறது.
திருநள்ளாறு கோவிலின் மேலே வரும் போது செயற்கைக் கோள் நின்றுவிடும் உண்மை அல்ல. நின்றால் மறுபடி தள்ளிவிட்டு ஸ்டார்ட் செய்வது யார்?
இன்று இரவு காஸ்மிக் கதிர்கள் தாக்கும் செல்போன் ஆப் பண்ணுங்க என நாசா அறிவிப்பு
இந்தக் குழந்தையின் புகைப்படத்தை ஷேர் செய்தால் ஃபேஸ்புக் ஒரு ரூபாய் கொடுக்கும் ..!
ஒரு ஷேர்க்கு ஒரு ருபாய்னா , அவன் எத்தனை கோடி குடுக்கனும்? அவன் பிசினஸ். பண்றானா  இல்ல  தர்மசத்திரம் வச்சு நடத்துரானா?
இந்த சாமி படத்தைப் பகிர்ந்தால் நல்லது நடக்கும், இது அந்த சாமிக்கு தெரியுமா?
ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புதிய 1000 ரூபாய் நோட்டு போட்டோசாப் வேலை..
இந்த லிங்க்கை ஷேர் செய்தால் 3 ஜி.பி இலவச டேட்டா கிடைக்கும் இருக்குர டேட்டாவும குறையும் …
மோடி இளைஞர்களுக்காக 10 ஜி.பி டேட்டா அனைவருக்கும் இலவசமாகத் தருகிறார்
புதுசா நெட்வொர்க் கம்பனி ஆரம்பிச்சுருக்காரா?
இலங்கைத் தமிழர்களுக்காக ஐ.நா., சபை வாக்கெடுப்பு நடத்துகிறது பொய்யான தகவல். வெப்சைட் மார்கெட்டிங்.
599 ரூபாய்க்கு அமேசான்ல 4G போன் அமேசான மூட போறாங்களா ?
கொழந்தய காணோம் அந்த கொழந்த கெடச்ச பின்னாடியும், ஸ்கூலுக்கு போனாக்கூட வீட்ல கொண்டு பொய் விட்டுடுராங்க .
ஆப்ரேசனுக்கு ரத்தம் வேணும் தேதி, நேரம் எதுமே இல்லாம அனுப்புனா எப்புடி?
இந்த தகவலை 18 பேருக்கு அனுப்பு. சாயிபாபா நல்லது செய்வார். இல்லனா கெட்டது நடக்கும்அவரோட வாட்ஸ்சப் நம்பர் என்ன?
3 குரூப்கு அனுப்பிட்டு பேலன்ஸ் செக் பன்னு எப்பிடி ஏறும் ? உங்க டேட்டா பேலன்ஸ்தான் குறையும்.
தடுப்பூசி போட்டால் ஆபத்துபொய்.எந்த அலோபதி மருத்துவரும் ஒப்புக்கொள்ளவில்லை.
10 ரூபாய் நாணயங்கள் செல்லாது பொய்.
வாட்ஸ்சப் சீனாவில் தயாரிக்கப்பட்டது். இந்த நிறுவனத்தின் பணம் முழுக்க சீனாவிற்கு செல்கிறது அமெரிக்காவில் டெவலப் செய்யப்பட்டது. தற்போது பேஸ்புக் வசம் உள்ளது.
டெலிகிராம் இந்திய அப்ளிகேஷன் ரஷ்யாவில் டெவலப் செய்யப்பட்டது.
இந்த நடிகர் நிவாரணத்திற்காக ஒரு பைசா கூடத் தரவில்லை அவன் காசு. அவன் இஷ்டம்.
“இதெல்லாம் பார்வர்ட் செய்யும் நண்பர்களே , கெடச்சா கிடைக்கட்டும் , அனுப்பி பாப்போம்னு அனுப்பாதிங்க”
எப்போதாவது வாட்ஸப் உபயோகிக்கும் நண்பர்கள் , புதிதாக மொபைல் உபயோகிக்கும் நண்பர்கள் , தயவு செய்து எந்த மெசேஜ்யும் பார்வர்ட் செய்யாதீர்கள்.
ஒரு மாதம் அனைத்து மெசேஜ்யும் படியுங்கள்.உங்களுக்கே புரியும்   நீங்கள் அனுப்பும் மெசேஜ் எற்கனவே 2232 தடவை எங்களுக்கு வந்துவிட்டது
இந்த ஃபேக் நியூஸ்களின் பின்னே, ஒன்று உங்களை ஏமாற்ற வேண்டும்; அல்லது உங்களைப் பயன்படுத்தி லாபம் அடையவேண்டும்.
எனவே நீங்கள் வாட்ஸ்அப்பில் அல்லது ஃபேஸ்புக்கில் அனுப்பும் ஒவ்வொரு செய்தியையும், ஒருமுறை உங்களுக்குள் சிந்தித்துவிட்டே பகிருங்கள்.
தேவையற்ற, வீண்பழி சுமத்துகின்ற, நம்பகத்தன்மையற்ற செய்திகள் உங்களை வந்து சேர்ந்தால் கூடப் பரவாயில்லை;
அடுத்தவருக்கு சேரும்படி ஷேர் செய்யாதீர்கள்.  இணைய உலகில் மறைந்திருக்கும் பிராடுகளிடம் இருந்து இனியாவது விடுபடுவோம்

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.