February 22, 2017
டெல்லி SBI ATM -யில் போலி 2000 நோட்டு! நாங்கள் யாரைதான் நம்புவது போலீசார் வேதனை!
பிப் 6-ம் தேதி டெல்லி எஸ்பிஐ ஏடிஎம்மில் பணம் எடுத்தபோது போலி ரூபாய் நோட்டுகள் வந்து உள்ளது. போலி ரூபாய் நோட்டுகளில் ரிசர்வ் பாங்க் ஆப் இந்தியா என அச்சிடப்பட்டு இருந்த இடத்தில் ‘சில்ரன் பாங்க் ஆப் இந்தியா’ என அச்சடிக்கப்பட்டு உள்ளது.
2000 ரூபாய் நோட்டுகளில் ரிசர்வ் வங்கியின் சின்னம் இடம்பெற்று உள்ள இடத்தில் பிகே என எழுத்து இடம்பெற்ற போலி சின்னம் இடம்பெற்று உள்ளது. ‘சில்ரன் பாங்க் ஆப் இந்தியா’ என அச்சடிக்கப்பட்ட போலி ரூபாய் நோட்டுகள் குழந்தைகள் விளையாடுவதற்காக கடைகளில் விற்பனை செய்யப்படுவது வழக்கமாக உள்ளது.
இந்நிலையில் இந்த போலி ரூபாய் நோட்டுகள் ஏடிஎம்மில் வந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனை உறுதிசெய்து உள்ள டெல்லி உயர் போலீஸ் அதிகாரி ஏடிஎம் முதலில் இதுபோன்ற 4 போலி ரூபாய் நோட்டுகளை வாடிக்கையாளருக்கு வழங்கி உள்ளது.
இச்சம்பவம் உள்ளூர் போலீசிடம் எடுத்துச் செல்லப்பட்டது. போலீசார் விசாரித்ததில் அவை போலி ரூபாய் நோட்டுகள் என தெரியவந்தது. உள்ளூர் இன்ஸ்பெக்டர் ஏடிஎம்மில் பணம் எடுத்த போதும் போலி ரூபாய் நோட்டே வந்து உள்ளது.
போலி ரூபாய் நோட்டுகள் கிடைத்தது ரோகித் என்பவருக்கு என தெரியவந்து உள்ளது. ரோகித் கடந்த 6-ம் தேதி மாலை 7.45 மணியளவில் ஏடிஎம்மிற்கு சென்று ரூ. 8 ஆயிரத்தை எடுத்து உள்ளார்.
ஆனால் அவை அனைத்துமே போலி ரூபாய் நோட்டுகள் என அவர் குற்றம் சாட்டி உள்ளார். இவ்விவகாரம் குழப்பத்தை ஏற்படுத்தவே போலீசாரும் ஏடிஎம்மில் சோதனை செய்து உள்ளனர்.
அப்போது போலி ரூபாய் நோட்டுகள் வெளியாகி உள்ளது. இச்சம்பவத்திற்கு பின்னால் யார் உள்ளனர் என்பது தெரியவரவில்லை, வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. எஸ்.பி.ஐ. வங்கியும் இவ்விகாரம் தொடர்பாக விசாரிக்க குழுவை அனுப்பி உள்ளதாக தெரிவித்து உள்ளது.
டெல்லி SBI ATM -யில் போலி 2000 நோட்டு! நாங்கள் யாரைதான் நம்புவது போலீசார் வேதனை!
Reviewed by மறத்தமிழன்
on
February 22, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
February 22, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.