Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

February 16, 2017

எடப்பாடி பழனிச்சாமி்க்கு ஆளுநர் அழைப்பு- பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுகிறார்?


தமிழக அரசியலில் நீடிக்கும் குழப்பம் முடிவுக்கு வர உள்ளது. அதிமுக சட்டசபை குழு தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சசிகலாவால் அதிமுக முதலமைச்சர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்ட அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தன்னை சந்திக்க வருமாறு ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார்.

இதையடுத்து அவரை சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு ஆளுநர் வித்யாசாகர் ராவ் அழைப்பு விடுப்பார் என்று தெரிகிறது. இதனால் கூவத்தூரில் பெரும் கொண்டாட்டமான சூழ்நிலை நிலவுகிறது

ஆளுநர் அழைப்பு விடுத்ததையடுத்து எடப்பாடி பழனிச்சாமி உள்பட 4 மூத்த அமைச்சர்களும் தலைவர்களும் அவரை சந்திக்க கூவத்தூர் விடுதியில் இருந்து புறப்பட்டு ஆளுநர் மாளிகை நோக்கி சென்று கொண்டுள்ளனர்.

மூன்றாவது முறையாக தன்னை சந்திக்கும் எடப்பாடி பழனிச்சாமியிடம் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபித்துவிட்டு ஆட்சியமைக்க உத்தரவிடுவார் என்று தெரிகிறது.

முதலில் இப்போதைய காபந்து முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இதே போன்ற ஒரு வாய்ப்பை ஆளுநர் தருவார் என்றும் தெரிகிறது. அவரால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாவிட்டாலோ அல்லது தனக்கு போதுமான ஆதரவு இல்லை என்று கூறிவிட்டு பன்னீர்செல்வம் தனது பதவியை ராஜினாமா செய்தாலோ எடப்பாடி பழனிச்சாமிக்கு பெரும்பான்மையை நிரூபிக்க அழைப்பு விடுப்பார் என்று தெரிகிறது.

மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் முகுல் ரோத்தகி ஆளுநருக்கு தந்த முக்கிய யோசனையின்படி, பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரை ஒரே நேரத்தில் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்கவும் (composite floor test in assembly) ஆளுநர் உத்தரவிடலாம்.
இதுவரை நிலவி வந்த பெரும் அரசியல் குழப்பத்துக்கு இன்று விடை கிடைக்கப் போகிறது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.