Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

February 5, 2017

சசி முதல்வராகப் போகிறாராமே.. இந்தக் கேள்விக்கு ஓ.பன்னீர் செல்வம் அளித்த பதில் என்ன தெரியுமா?


சசிகலா முதல்வராகப் போகிறாராமே என்ற கேள்விக்கு வெறும் புன்னகையை மட்டுமே பதிலாகக் கொடுத்தார் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்.

சசிகலா முதல்வராகப் பொறுப்பேற்கவுள்ளாராமே என்று செய்தியாளர்கள் கேள்வி கேட்டதற்கு முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பதிலளிக்க மறுத்து விட்டார். மாறாக தனது டிரேட் மார்க் புன்னகையை மட்டும் சிந்தி விட்டுப் போனார் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்.
அதிமுக வட்டாரம் கலகலத்துப் போய்க் கிடக்கிறது. குறுகிய காலத்தில் 2வது முறையாக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தைக் கூட்டியுள்ளார் சசிகலா. இதனால் ஓ.பன்னீர் செல்வத்திடமிருந்து முதல்வர் பதவி பறி போகப் போகிறதா என்ற பெரும் பரபரப்பு கிளம்பியுள்ளது. மக்கள் மத்தியில் ஓ.பன்னீர் செல்வம் நல்ல பெயர் வாங்கிக் கொண்டுள்ள நிலையில் மக்கள் மத்தியில் கடும் அதிருப்திக்குள்ளாகியுள்ள சசிகலா வசம் அந்தப் பதவி போய் விடுமோ என்ற அதிர்ச்சியும் மேலோங்கியுள்ளது.

இந்த நிலையில் சென்னை எண்ணூர் கடல் பகுதியில் எண்ணெய்ப் படல பாதிப்பை ஆராய முதல்வர் இன்று வருகை தந்தார். அவருடன் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்ட அதிகாரிகளும், சசிகலா ஆதரவு அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோரும் வந்திருந்தனர்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம். அப்போது செய்தியாளர் ஒருவர் சசிகலா முதல்வராகப் போகிறாராமே என்ற கேள்வியைக் கேட்டார். அதற்கு முதல்வர் பதிலளிக்கவில்லை. மாறாக வழக்கம்போல தனது டிரேட் மார்க் வெள்ளந்தி சிரிப்பை சிந்தி விட்டு நகர்ந்தார் முதல்வர்.
முதல்வரின் இந்த சிரிப்புக்கு என்ன அர்த்தம் என்றுதான் விளங்கவில்லை... ஏங்க நீங்க வேற தர்மசங்கம் கொடுக்கறீங்கன்னு நினைத்துச் சிரித்தாரா அல்லது நடக்காததைப் பத்தி கேக்கறீங்களே என்று நினைத்துச் சிரித்தாரா.. அவருக்கே வெளிச்சம்!

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.