Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

February 20, 2017

கடவுள் சந்தையாக்கப்படுகிறார்!!!


ஜக்கி வாசுதேவ் நிகழ்ச்சில் மோடி பங்கேற்க போகிறாராம்.
சிலர் பங்கேற்கவேண்டாம் என்று கூறுகிறார்கள்.

இவர்களின் அஜெண்டாவில் பாஜகவின் பிரதமர்கள் அதன் மாநில அரசை ஆளும் முதலமைச்சர்கள் பங்கு கொள்ளவேண்டும் என்பது நாக்பூரில் எழுதப்பட்ட விதி.

இந்த வலதுசாரிகள் துணை இல்லாமல் இவர்கள் ஒளிர முடியாது என்பது எதார்த்தம். இதை யாருமே உணர்வது இல்லை.

ஜக்கிவாசுதேவ் / ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் / பாபா ராம்தேவ் போன்றவர்களை பாஜக இயக்குவது மக்கள் மத்தியில் அதிக அளவு மூடநம்பிக்கைகளை திணிப்பதற்க்கே தவிர வேற நோக்கம் இல்லை.

ஒளி அனைத்தும் இவர்களுக்கு கிழக்கிலிருந்து வரவில்லை ஆனால் அவ்வாறு ஒரு பிம்பத்தை கொடுத்து மக்களை மூடநம்பிக்கையில் தள்ளுகிறார்கள்.

அதேவேளையில் யானைகளை அழித்து நிலங்களை அபகரிக்கிறார்கள்.

இதே போல் தேசவிரோதிகளை ஊக்குவித்து மேலும் அவர்களின் நிகழ்ச்சிகளில் பங்குபெற்று மக்களை மூடநம்பிக்கைகளில் வைப்பது இவர்கள் பண்பாடு.

பெரியார் மண் / சிங்காரவேலர் தோன்றிய நாடு என்று பெருமையாக பேசுகிறோம் ஆனால் மூடநம்பிக்கைக்கு எதிரான பிரச்சாரங்களை செய்வதே இல்லை.

கடவுளை சந்தையாக பயன்படுத்தி நிலங்களை அபகரிப்பது கார்பர்ட் சாமியார்களுக்கு அதிகார வர்க்கமும் கைகோர்த்து உதவுதல் நாட்டை மேலும் அழிவு பாதையில் தான் கொண்டு செல்லும்.

மேலும் இந்த சாமியார்கள் நேரடியாக பல அயோக்கியத்தனத்தைகளை செய்கிறார்கள், எளிதாக அதிலிருந்து வெளியே வருகிறார்கள். சாமியார்கள் எவ்வளவுதான் அம்பலப்பட்டுப் போனாலும் ஆளும் வர்க்கம் அவர்களைக் கைவிடுவதில்லை.

இந்தியாவில் கடைபிடிப்பதாக சொல்லப்படும் மதசார்புயின்மைக்கு எதிரானது அல்ல என்று அதிகார வர்க்கம் எளிதாக  சொல்லி கடந்து சென்று விடுகின்றனர், மேலும் இதனால் தான் மதசார்பின்மை மிளிர்கிறது என்று பரப்புவரை செய்கிறார்கள்.

ஏழை பணக்காரன் என்று அனைவரும் கடவுளை நாடுகின்றனர். இதனால் குறுக்கர்கள், புரோகிதரர்கள், பூசாரிகள் , ஜோதிடரர்கள், வாஸ்து நிபுணர்கள் , ஆன்மீக ஆலேசனை செய்பவர்கள் அனைவருக்கும் நல்ல யோகம் அடித்து இருக்கிறது. இதுவெல்லாம் அதிகார வர்க்கம் துணையோடு செய்துவருகிறார்கள்.

உழைக்கும் மக்கள் தாங்கள் கடினமாக உழைத்து ஈட்டிய வருமானத்தை ஒருபுறம் டாஸ்மார்க்கும் மறுபுறம் கோவில் சாமியார்களுக்கும், மூடநம்பிக்கைகளுக்கு பயன்படுத்துகிறார்கள்.

ஆதலால் ஜக்கி / ரவிஷங்கர் / பாபா ராம்தேவ் போன்றவர்கள் நிகழ்ச்சியில் அதிகார வர்க்கம் நேரடியாக பங்குபெறுவது ஆச்சரியம் இல்லை. அவர்கள் நாம் தடுத்தாலும் பங்குபெறுவார்கள்.

இன்று கார்ப்பரேட் சாமியார்கள் சொத்துமதிப்புகள் எல்லாம் வரிகூட கட்டுவதற்கு செலவு செய்வது இல்லை.

நேர்மையற்ற இவர்களிடம் கடவுள் அனுசரணம் எப்படி இருக்கும் ?

கார்ப்பரேட் சாமியார்கள் கடவுளை சந்தைப்படுத்தி வியாபாரம் செய்கிறார்கள்.

நன்றி கதிர்

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.