Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

February 26, 2017

பிரதமர் கேட்ட மூன்று வாக்குறுதிகள் : ஓகே சொன்ன சசி டெல்லி விரைகிறார் முதல்வர்


கோவையில் ஜக்கியின் விழாவில் கலந்து கொள்ள பாரதப் பிரதமர் மோடி கோவை வந்தார். அவரை வரவேற்க முதல்வர் எடப்படியார் சென்றார்.வேறு யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை.

மத்திய அமைச்சர் பொன்னார் வெளியே நிறுத்தப்பட்டார். முதல்வரும் பிரதமரும் தனியே சில விஷயங்களை ஆலோசித்தனர்.

அதுகுறித்து வலைத்தளங்களில் சில விஷயங்கள் கசிந்தது. பிரதமர் முதல்வரிடம் மூன்று வாக்குறுதிகள் கேட்டதாகவும் அதற்கு எந்த உறுதியும் கொடுக்காத முதல்வர். கார்டனிடம் கேட்டு விட்டு டெல்லி வருவதாகவும் கூறினார் என்கிறார்கள்.

பிரதமரின் மூன்று கோரிக்கைகளில் மீத்தேன் திட்டமும் ஒன்று என்பதாக செய்திகள் கசிகிறது. இன்று இரவு டெல்லி செல்லும் முதல்வர் நாளை பிரதமரைச் சந்திக்கிறார்.

மீத்தேன் போராட்டம் நெடுவாசலில் உச்சகட்டத்தை அடைந்துள்ள நிலையில் முதல்வரின் பயணம் முக்கியத்துவம் பெறுகிறது. ஆனால், இப்போதைய நிலையில் டெல்லி என்ன கோரிக்கை வைத்தாலும் அதற்கு சம்மதிக்கும் நிலையில் தான் மாநில அரசின் நிலைமை இருகிறது.

முன்னால் முதல்வர் ஜெயலலிதாவோடு முதல்வர் சிம்மாசனத்திற்கு இருந்த கம்பீரம் போய்விட்டது என்பதே நிதர்சனம்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.