Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

February 12, 2017

மயக்கமா, கலக்கமா.. மனதிலே நடுக்கமா.. சசி குரலிலும், முகத்திலும் ஒரு பீதி தெரியுதே!!


கடந்த சில நாட்களாக காணப்பட்ட பிரகாசம் குறைந்து சசிகலா முகத்தில் ஒரு விதமான நடுக்கம் தெரிவதாக பேச்சு கிளம்பியுள்ளது.

கடந்த 2 நாட்களாக சசிகலாவின் குரலில் பீதி தெரிகிறது. அவரது முகம் இருண்டுள்ளது. நம்பிக்கை இழக்க ஆரம்பித்து விட்டாரோ என்ற சந்தேகம் வரும் வகையில் அவர் காணப்படுகிறார்.
முதல்வர் பதவியை அடைந்தே தீர வேண்டும் என சசிகலா பிடிவாதமாக உள்ளார். இதற்காக அதிமுக எம்எல்ஏக்களின் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்பதற்காக அதிமுக எம்எல்ஏக்களை கூவத்தூரில் அவரது கட்டுப்பாட்டில் வைத்துள்ளார்.

தமிழக மக்கள் இதை அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டுள்ளனர்.
அதிமுக பொதுச்செயலாளராக பதவியேற்ற நாள் முதல் எழுதி வைத்தே படித்து வந்த சசிகலா கடந்த செவ்வாய்க்கிழமை முதல்வர் ஓபிஎஸ் கூறிய அதிரடி குற்றச்சாட்டுகளால் நள்ளிரவு ஒன்றேகால் மணிக்கு செய்தியாளர்களிடம் பேசினார்.

கண்களை உருட்டி புருவங்களை உயர்த்திய சசி
முதல் முறையாக செய்தியாளர்களை எந்த பேப்பரும் இன்றி சந்தித்த அவர் கண்களை உருட்டி புருவங்களை உயர்த்தி மிக தைரியமாக பேசினார். ஓபிஎஸ் மீது கட்சி ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் என தீர்க்கமாக கூறினா

பேச்சில் தெனாவட்டு
எம்எல்ஏக்கள் அத்தனை பேரும் அவருக்கு சாதகமாக இருந்ததால் அவர் பேச்சில் தெனாவட்டு தெரிந்தது. ஆனால் கடந்த 2 நாட்களாக ஓபிஎஸ் அணிக்கு மாறும் அதிமுக எம்பிக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் மன்னார்குடி கும்பல் அதிர்ச்சியடைந்துள்ளது.

முகத்தில் தெளிவு இல்லை
கடந்த 2 நாட்களாக செய்தியாளர்களை சந்திக்கும் சசிகலாவின் முகத்தில் தெளிவு இல்லை. எதையோ பறிகொடுத்தது போன்ற சோகம் ஆட்கொண்டு அவரது முகத்தில் இருள் சூழ்ந்துள்ளது.

குரளில் நடுக்கம், தழுதழுப்பு
அவ்வப்போது குரலை உயர்த்தி பேசினாலும் குரலில் ஒரு நடுக்கமும் தழுதழுப்பும் தெரிகிறது. ஓபிஎஸ் அணிக்கு ஆதரவு பெருகி வருவதால் மன்னார்குடி கும்பலுக்கு பீதி ஏற்பட்டதன் வெளிப்பாடும், ஆட்சியமைக்க முடியாமல் போய்விடுமோ என்ற பீதியும் தான் இதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.
நம்பிக்கை இழக்க ஆரம்பித்து விட்டாரோ ஜெயலலிதாவின் முன்னாள் தோழி?

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.