Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

February 21, 2017

அண்ணா,எம்ஜிஆர்,ஜெயலலிதா சமாதிகள், ஓகே! இன்னொரு சமாதி ஒன்று உண்டே எங்கே இருக்கு? அடப்பாவிங்களா?


சமாதி வழிபாடுகள் தவிர்க்கப்பட வேண்டும் என்கிற கருத்து ஒரு புறம் வலுத்து வருகிறது.
ஆனால், நாம் புதிது புதிதாக சமாதிகள் கட்டிக் கொண்டு கூட்டம் கூட்டமாக திருவிழா போல கொண்டாடிக்கொண்டு இருக்கிறோம்.

எல்லாம்  சரி..! அண்ணா சமாதி, எம்ஜிஆர் சமாதி, ஜெயலலிதா சமாதி. இந்த மூன்றும் இன்று மக்கள் வழிபாட்டுத் தளமாக மாறி விட்டது.
இந்த மூன்று பேரோடும் சம்பந்தப்பட்ட இன்னொரு  முதல்வர் ஒருவர் இருந்தாரே..? அவர் பெயர் ஜானகி ராமச்சந்திரன் ஆயிற்றே? அவரின் சமாதி எங்கே ? அது என்ன ஆனது?
ராமாவரம் தோட்டம்.  மூன்று வாரங்களே முதல்வராக இருந்த எம்.ஜி.ஆரின் மனைவி,  வி.என்.ஜானகியின் சமாதி அங்கேதான் இருந்தது.
அங்கே பெரிய கேட்டுக்கு அடுத்து வாசலே இல்லாமல் திறந்திருந்தது ஒரு வழி. உள்ளே சென்றதும் ஒருவர் தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தார்.
வாங்க என்று உடல்மொழியிலேயே அன்பாய் அழைத்துவிட்டு அவர் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தார்.
நூறடி தூரத்தில் எம்.ஜி.ஆர் வீடு. தமிழ்நாட்டையே இன்னமும் தன் பெயரால் ஆண்டுகொண்டிருக்கும் அவர் வாழ்ந்த வீடு, எந்தக் களேபரங்களும் இல்லாமல் இருந்தது.
ஜானகி அம்மாள் சமாதி. பார்த்தேன். சாதாரண அளவிலான புகைப்படம் ஒன்று வைக்கப்பட்டிருக்க சலவைக்கல் மேடையுடன் இருந்தது சமாதி.
தோட்டக்காரரிடம் பேச்சுக் கொடுத்தேன். ‘ஐயா இருக்கறப்ப இருந்து இருக்கேனுங்க’ என்றவரிடம் இன்றைய அரசியல் சூழல் குறித்துக் கேட்டால், ‘அதைப் பத்தியெல்லாம் பேச எனக்கு தகுதி இல்லைங்க.
ஒண்ணே ஒண்ணுங்க. எல்லாம் தலைவரோட போச்சுங்க. இதப் பாருங்க. இந்த மாதிரி கிழிஞ்ச லுங்கி கட்டிருந்தாலும் சரி, அழுக்கு வேட்டி கட்டிருந்தாலும் சரி.. தலைவர் கூப்பிட்டுப் பேசுவாருங்க.
இப்ப வெள்ள வேட்டி கட்டிகிட்டா மட்டும்தான் பேசறாங்க. ஏழபாழைங்ககிட்ட யார்ங்க நெருங்கிப் பேசறாங்க?’ என்று ஆதங்கப்பட்டார்.
இன்னொருவர் சசிகலாவைப் பற்றிச் சொல்லும்போது, ‘மொத்தமே 3, 4 வாட்டிதான் வந்திருக்காங்க. ஜெயலலிதா இல்லாம வந்தது,   அதுக்கு முன்ன தலைவர் இருந்த இடம் யாருக்குத் தெரிஞ்சிருக்கு? ஓட்டுக்காக வர்றதுதான்’ என்றார்.
முதலமைச்சர் யார் என்று தெரியுமா என்று கேட்டால், கையெடுத்துக் கும்பிடுகிறார்கள். அவர் இடத்துல யார் இருக்காங்கனு கேட்டு நோகடிக்காதீங்க’ என்கிறார்.
 அண்ணா சமாதியில் ‘எதையும் தாங்கும் இதயம் இங்கே உறங்குகிறது’ என்று எழுதப்பட்டிருந்தது நினைவுக்கு வந்தது. எதையும் தாங்கும் இதயம்,  அண்ணாவுக்கு மட்டும் அல்ல. மக்களுக்கும்தான்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.