முதல்வர் ஓபிஎஸின் பேட்டி சசிகலாவின் குடும்பம் அதிமுகவை கபளீகரம் செய்துள்ளதையே காட்டுகிறது என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் பேட்டி மன்னர்குடி கும்பல் அதிமுகவை கபளீகரம் செய்திருப்பதையே காட்டுகிறது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். அதிமுக எம்எல்ஏக்களை ஆளுநர் தனித்தனியே அழைத்துப் பேச வேண்டும் என அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் வலியுறுத்தியுள்ளார்.
அதிமுகவில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. அடுத்து என்ன நடக்குமோ என்ற எதிர்ப்பார்ப்பு ஒவ்வொரு நிமிடமும் அதிகரித்துக்கொண்டே இருகிறது.
நேற்று செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறினார். இது தமிழக மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில் அதிமுக எம்எல்ஏக்களை தனித்தனியே ஆளுநர் அழைத்துப் பேச வேண்டும் எனக்கூறியுள்ளார்.
எம்எல்ஏக்களை தனித்தனியே சந்தித்தப் பிறகு புதிய முதல்வரை தீர்மானிக்க ஆளுநர் தீர்மானிக்க வேண்டும் என்றும் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். மேலும் முதல்வர் ஓபிஎஸின் பேட்டி அதிமுகவில் என்ன நடக்கிறது என்பதை அம்பலப்படுத்தியிருக்கிறது என்றும் அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.சசிகலா குடும்பம் கட்சியை கபளீகரம் செய்திருப்பதை ஓபிஸ் பேட்டி வெளிப்படுத்தியுள்ளது என்றும் ராமதாஸ் கூறியுள்ளார்.



No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.