February 4, 2017
‘‘ட்ரம்ப்பின் தலையை பிடித்து டேபிள்ல மோதுவேன்’’ அர்னால்டு ஆவேசப் பேட்டி
அமெரிக்க தொலைக்காட்சி ஒன்றில் ‘செலிப்ரிட்டி அப்ரென்டிஸ்’ என்னும் நிகழ்ச்சியை அதிபர் ட்ரம்ப்பைத்தொடர்ந்து, ஹாலிவுட் சூப்பர் ஸ்டாரும், முன்னாள் கலிபோர்னியா கவர்னரான அர்னால்டு தொகுத்து வழங்குகிறார்.
இதனால் அர்னால்டு மீது, அதிபர் ட்ரம்ப்புக்கு ஏற்கெனவே இருந்த வெறுப்புக்களும் சேர்ந்து இன்னும் அதிகரிக்க ஆரம்பித்தது. மேலும், ட்ரம்ப்புக்கும், அர்னால்டுக்கும் இடையே காரசாரமான கருத்து வேறுபாடுகள் நிலவிவந்தது.
இந்நிலையில், சமீபத்தில் ‘மென்ஸ் ஜார்னல்’ என்ற பத்திரிகைக்கு அர்னால்டு அளித்த பேட்டியில், ‘ட்ரம்ப்பின் முகத்தை மர டேபிளுக்கு அறிமுகப் படுத்தப்போகிறேன்’ என்று கூறினார். அதாவது ‘‘ட்ரம்ப்பின் முகத்தை பிடித்து டேபிள்ல மோதுவேன்’’ என்று கூறினார்.
இதனைக்கேள்விப்பட்டு ஆத்திரமடைந்த ட்ரம்ப், தனது டுவிட்டர் பதிவில் அர்னால்டை கடுமையாக சாடினார். இதனைத்தொடர்ந்து, சமீபத்தில் அர்னால்டு, ‘நாம் அமெரிக்கர்கள், நம்மக்குள் கருத்து வேறுபாடுகள் இல்லாமல் நாட்டின் முன்னேற்றத்துக்கு ஒற்றுமையாக செயல்பட வேண்டும்’ என ட்ரம்ப்புக்கு சமாதானக் கொடி காட்டியுள்ளார்.
‘‘ட்ரம்ப்பின் தலையை பிடித்து டேபிள்ல மோதுவேன்’’ அர்னால்டு ஆவேசப் பேட்டி
Reviewed by மறத்தமிழன்
on
February 04, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
February 04, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.