February 23, 2017
‘‘தற்கொலைக்கு தூண்டும் காடு’’ திகிலூட்டும் மர்மங்கள்! நெஞ்சே பதறுது!
ஜப்பான் நாட்டில் மிக உயரமாக ஃபுஜி என்ற மலை காணப்படுகிறது. இந்த மலையில் எப்போதும் எரிமலை பொங்கிக் கொண்டே இருக்குமாம். ஆனாலும் இம்மலை அவ்வளவு ரம்மியமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
இந்த மலையின் அழகை ரசிப்பதற்காகவே சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகை தருவதாக கூறப்படுகிறது. இந்த மலை ஷிஜிவோகா, யாமான்ஷி என்ற இரண்டு நகரங்களின் எல்லைகளில் அமைந்துள்ளது.
இந்நிலையில் இந்த மலையின் அடிவாரத்தில் திகிலூட்டக்கூடிய ‘ஏயோக்கிகாரா’ காடு ஒன்று இருப்பக்கிறது. இதனை ஜப்பான் மொழியில் ‘ஜீகாய்’ என்று அழைப்பர், இதன் பொருள் ‘சீ ஆப் டிபீஸ்’. இதன் அடர்த்தி அதிகமாக இருப்பதால் இப்பெயரை பெற்றதாக கூறப்படுகிறது.
இங்கு ஐஸ் குகை, காற்றுக் குகை என்று இரண்டு வகையான குகைகள் உள்ளன. ஆனால் இதுதான் ஜப்பானில் தற்கொலை செய்து கொள்பவர்களின் முதன்மையிடமாக உள்ளது. மேலும், இக்காட்டில் எங்கு பார்த்தாலும் பிணங்களாக காட்சியளிக்கும். மரங்களில் தூக்குக் கயிறுகளும் அதில் எலும்புக் கூடுகளும் இன்னும் காட்சியளிப்பதாக கூறப்படுகிறது.
வருடத்திற்கு இங்கு 100 பிணங்களாவது கண்டெடுக்கப்படுகிறது. சாதாரண மனநிலையோடு இந்த காட்டிற்கு வந்தால்கூட தற்கொலைக்கு தூண்டிவிடும் தன்மையுள்ள அபாயகரமான காடு. அதனால்தான் இக்காட்டை “தற்கொலை காடு” என்கிறார்கள்.
ஜப்பானிய அரசு காட்டின் சில பகுதியை மட்டும் சுற்றுலா பயணிகளுக்கென அனுமதித்திருக்கிறது. சில பகுதிகளை தடைசெய்யபட்ட பகுதிகளாக அறிவித்து அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது.
இன்றைய நிலைமையில் தற்கொலை விகிதம் பல மடங்காக அதிகரித்திருக்கிறது. மனஅழுத்தங்கள் காரணமாகவே முக்கால்வாசி தற்கொலைகள் இங்கு நிகழ்வதாக தெரிவிக்கப்படுகின்றன.
இயந்திரமயமான இவ்வுலகில் அருகில் இருப்பவரிடம் பேசாமால் தூரத்தில் இருப்பவரிடம் அலைபேசியில் பேசுவதால் என்ன பயன்? தற்கொலை எண்ணம் கொண்டவரிடம் பத்து நிமிடம் பேசினால் போதும் அவர் தற்கொலை செய்துகொள்ளவே மாட்டார் என்கிறார்கள், உளவியலாளர்கள்.
இன்றைய சூழ்நிலையில் அது சாத்தியமில்லாமல் போகிறது. தொழில் நுட்பங்களால் மனிதர்களை மறந்துவிடுகிறோம். சதையினாலும், ரத்தத்தினாலும் செய்யப்பட்டது தான் இதயம் என்பதையும் மறந்துவிடுகிறோம், மனது விட்டு பேசினால் எதற்கும் தீர்வு உண்டு என மேலும் எச்சரிக்கிறார்கள்
‘‘தற்கொலைக்கு தூண்டும் காடு’’ திகிலூட்டும் மர்மங்கள்! நெஞ்சே பதறுது!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
February 23, 2017
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
February 23, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.