February 13, 2017
"நானும் ரவுடிதான்.. நானும் ரவுடிதான்".. சசிகலாவை செமையாக ஓட்டிய ஓ.பி.எஸ்.!
சசிகலா பேச்சைப் பார்த்தால் நானும் ரவுடிதான் காமெடிதான் நினைவுக்கு வருவதாக முதல்வர் ஓ.பி.எஸ் கூறியுள்ளார்.
சசிகலாவை வடிவேலுவுடன் ஒப்பிட்டுப் பேசி அவரை காமெடி பீஸ் என்று மறைமுகாமாக கூறி விட்டார் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்.
ஆஹா.. நம்ம ஓ.பி.எஸ்ஸா இது என்று அத்தனை பேரும்
ஆச்சரியப்படும் அளவுக்கு அப்படி ஒரு பேச்சு பேசி வருகிறார் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம். இவருக்குள் இப்படியும் ஒரு மனிதர் இருந்தாரா இத்தனை நாட்கள் என்று பலரும் வியந்து போகும் அளவுக்கு இருக்கிறது முதல்வரின் பேச்சுக்கள்.
அழுத்தம் திருத்தமாக பேசுகிறார். இயல்பாகப் பேசுகிறார். எந்தக் கேள்வி கேட்டாலும் எதார்த்தமாக பதிலளிக்கிறார். சற்றும் தயக்கம் இல்லை, குழப்பம் இல்லை. தெளிவாக பேசுகிறார். அதை விட முக்கியமாக நள்ளிரவு நேரமாக இருந்தாலும் அந்த புன்னகை மட்டும் முகத்தை விட்டு அகலுவதே இல்லை.
ஜாலியாக இருக்கிறார் மனிதர். ஜாலியாக பேசுகிறார். சசிகலாவின் பேச்சை ஜாலியான முறையில் விமர்சிக்கிறார். மனதை சித்திரவதை செய்யாத அளவுக்கு நாசூக்காக, நாகரீகமாக விமர்சிக்கிறார். நேற்று கூட கூவத்தூரில் தன்னை சிங்கம் என்று கூறி சசிகலா பேசினார். இதை சமூக வலைதளங்களில் தாறுமாறாக விமர்சித்துக் கொண்டுள்ளனர். ஓ.பி.எஸ்ஸும் கூட இதுகுறித்துக் கருத்துக் கூறினார்.
அவர் கூறுகையில், யாராவது தன்னைத் தானே சிங்கம் என்று சொல்வார்களா, சொல்லுங்க. அவர் சிங்கம் வருது, சிங்கம் வருது என்கிறார். இதைப் பார்த்தால் எப்படி இருக்கு தெரியுமா.. வடிவேலு ஒரு படத்தில் சொல்வாரே, போலீஸ் வேனில் ஏறப் போகும்போது போலீஸார் தடுப்பார்கள். அதற்கு வடிவேலு, நானும் ரவுடிதான் நானும் ரவுடிதான் என்று சொல்வாரே அது போல இருக்கு என்றார் ஓ.பன்னீர் செல்வம்.
அப்படிச் சொல்லும்போது பன்னீர் முகத்தைப் பார்க்க வேண்டுமே.. அப்படி ஒரு சிரிப்பு.!
"நானும் ரவுடிதான்.. நானும் ரவுடிதான்".. சசிகலாவை செமையாக ஓட்டிய ஓ.பி.எஸ்.!
Reviewed by மறத்தமிழன்
on
February 13, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
February 13, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.