February 21, 2017
சசிகலா சிறையிலிருந்து விரைவில் வருவார் – ஜெ., அண்ணன் மகன் தீபக் உறுதி!
சசிகலா சிறையிலிருந்து விரைவில் வெளியில் வருவார் என்று ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் கூறியுள்ளார்.
சொத்து குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றத்தால் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட சசிகலா தற்போது பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அவரை ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் நேற்று நேரில் சென்று சந்தித்தார். பின்னர் வெளியில் வந்த தீபக், நிருபர்களிடம் கூறுகையில், சசிகலா அத்தை சிறையில் இருப்பதற்கு பின்னணியில் பெரிய சதி உள்ளது.
உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பால் இதுகுறித்து மேலும் ஏதும் கூறவிரும்பவில்லை. சசிகலா நலமாக இருப்பதாகவும், சீக்கிரம் அவர் வெளியில் வருவார் எனவும் தீபக் கூறினார்.
மேலும், தன் சகோதரி தீபா பற்றி தன்னிடம் ஏதும் கேட்க வேண்டாம் என கூறிய தீபக், தனது ஆதரவு சசிகலாவுக்கு தொடரும் எனவும் கூறினார்.
சசிகலா சிறையிலிருந்து விரைவில் வருவார் – ஜெ., அண்ணன் மகன் தீபக் உறுதி!
Reviewed by மறத்தமிழன்
on
February 21, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
February 21, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.