Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

February 23, 2017

தலைகவசம் இன்றி பயணித்தவர்கள் மீது போலிஸார் துப்பாக்கி சூடு


தலை கவசம் இன்றி மோட்டார் சைக்கிளில் பயணித்த சகோதரர்கள் மீது பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திஹன நகரத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவரின் துப்பாக்கியை பறிக்க முயற்சித்த ஒருவர் மீது மற்றொரு பொலிஸார் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.
பாதுகாப்பு தலைகவசம் இன்றி மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரை நிறுத்துமாறு பொலிஸார் கோரியுள்ளனர். எனினும் உத்தரவை மீறி அவர்கள் பயணித்ததோடு முன்னால் நின்ற பொலிஸ் அதிகாரியின் துப்பாக்கியையும் பறிக்க அவர்கள் முயற்சித்துள்ளனர்.
இதன்போது மற்றுமொரு பொலிஸ் அதிகாரியினால் சந்தேகநபர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. பின்னர் அவர்கள் தப்பி சென்று தெல்தெனிய வைத்தியசாலையில் அனுமதியாகியுள்ளனர்.
இந்த சந்தேக நபர்கள் இருவரும் சகோதரர்களாகும். பிரதேசங்களில் இடம்பெறும் கொள்ளை மற்றும் போதைப்பொருள் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இவர்கள் தேடப்படும் சந்தேகநபர்கள் என பொலிஸார் அறிவித்துள்ளனர்.
குறித்த சகோதரர்களில் ஒருவர் மீது வீடொன்றை உடைத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுப்பட்டமை தொடர்பில் தெல்தெனிய நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன் அதற்கான தீர்ப்பு எதிர்வரும் மாதம் 27ஆம் திகதி வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.