February 18, 2017
மெரினாவில் உண்ணாவிரதம் இருந்த ஸ்டாலின் கைது - திமுக எம்எல்ஏக்களும் கைதாகினர்
மெரீனாவில் காந்தி சிலை முன்பு உண்ணாவிரதம் இருந்த எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலினை போலீசார் கைது செய்தனர். அவருடன் திமுக எம்எல்ஏக்களும் கைது செய்யப்பட்டனர்.
சட்டசபையில் இருந்து தாக்கி வெளியேற்றப்பட்ட எதிர்க் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் மெரீனாவில் காந்தி சிலை அருகே உண்ணாவிரதப் போராட்டத்தை துவக்கினார். உடனடியாக பல்லாயிரக்கணக்கானோர் குவிந்தனர். இதனையடுத்து ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்கள் கைது செய்யப்பட்டனர்.
சட்டசபையில் இருந்து வெளியேற்றப்பட்ட ஸ்டாலின் ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து சட்டசபையில் நடந்த நிகழ்வுகள் குறித்து விளக்கி, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் அரசு பெரும்பான்மையை நிரூபித்தது செல்லாது என அறிவிக்கக் கோரினார்.
அவைக் காவலர்களின் தாக்குதலில் கிழிந்த சட்டசபையுடன் சட்டசபையில் இருந்து கிளம்பிய ஸ்டாலின், நேராக ஆளுநர் மாளிகை சென்றுவிட்டு காந்தி சிலைக்கு வந்தார். ஸ்டாலின் உண்ணாவிரதத்தை துவக்கிய அறிந்த ஏராளமான திமுகவினர் மெரீனாவில் குவிந்தனர்.
சென்னை முழுவதும் பல பகுதிகளில் போராட்டம் நடைபெற்றது. காந்தி சிலை முன்பு ஸ்டாலினுடன் துரைமுருகன் உள்ள எம்எல்ஏக்களும் கனிமொழி, தயாநிதி மாறன் ஆகியோரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
இதனையடுத்து ஸ்டாலின் உள்ளிட்ட எம்எல்ஏக்கள் 88 பேரை போலீசார் கைது செய்தனர் கடற்கரை சாலையே பரபரப்பாக காணப்பட்டது. போக்குவரத்து மாற்றிவிடப்பட்டது.
கல்வீச்சு
எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் மீது நடைபெற்ற வன்முறையைக் கண்டித்து கடலூரில் அரசு பேருந்துகள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அதே போன்று பெரம்பலூர், ஈரோட்டிலும் திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
மெரினாவில் உண்ணாவிரதம் இருந்த ஸ்டாலின் கைது - திமுக எம்எல்ஏக்களும் கைதாகினர்
Reviewed by மறத்தமிழன்
on
February 18, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
February 18, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.