Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

February 3, 2017

வேற வழியே இல்லை சித்தப்பா, கலைஞரிடம் கெஞ்சிய ராதாரவி – சசிகலா அதிர்ச்சி?



நடிகர் ராதாரவி திமுகவில் தீவிரமாக செயல்பட்டு வந்தார். திடீரென திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் ஐக்கியமானார்.
அதிமுகவில் சேர்ந்த பிறகு ஜெயலலிதா அவரை எம்.எல்.ஏ.வாக்கினார். 2009ல் மீண்டும் அதிமுகவில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தார் ராதாரவி.
பின்னர் டெல்லியில் ராகுல்காந்தியையும், திமுக தலைவர் கருணாநிதியையும் சந்தித்தார். ஆனால் 2010ல் அதிமுகவில் இணைந்தார்.
தற்போது ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் கட்சியில் நடந்து குழப்பமான அரசியலால் அதிமுகவில் இருந்து ஒதுங்கியுள்ளார்.
இந்நிலையில், பழனியில், நடிகரும் திமுக நிர்வாகியுமான வாகை சந்திரசேகர் மகள் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ராதாரவி பேசுகையில், தற்போது நான் எந்த தலைமையும் ஏற்கவில்லை என்று கூறியிருக்கிறார்.
மேலும், விரைவில் நல்ல முடிவை தெரிவிப்பதாகவும் கூறினார். இந்நிலையில் நான் சித்தப்பாவாக கருதும் கருணாநிதி விரைவில் உடல்நலம் பெறுவார் என்றும் கூறியிருக்கிறார்.
மேலும் ஸ்டாலின் முதல்வராகும் நேரம் வந்துவிட்டது. சிலர் திமுகவிற்கு எப்போது வருவீங்கன்னு கேட்கிறாங்க. அதற்கான நேரம் வந்துவிட்டதாகவும் கூறியிருக்கிறார்.
ராதாரவியின் இந்த சூசகமான பேச்சு, சசிகலா தலைமையை விரும்பவில்லை. அதனால் திமுகவில் இணைய போகிறார் என்றும் தகவல் வெளியாகியுள்ளன.
நடிகர் ராதாரவி ஸ்டாலினை பாராட்டி பேசியிருப்பது, சசிகலா மற்றும் அதிமுகவினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருப்பதாக கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.