Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

February 18, 2017

சட்டசபைக்குள் கலவரம்..கொந்தளிப்பைப் பார்த்து ஓடிய சபாநாயகர் தனபால்!


தமிழக சட்டசபையில் இன்று நடந்த பெரும் கொந்தளிப்பைத் தொடர்ந்து சபாநாயகர் தனபால் அங்கிருந்து போய் விட்டார்.

சட்டசபையில் இன்று பெரும் கலவரம் வெடித்தது. சபாநாயகரின் இருக்கையும் அடித்து நொறுக்கப்பட்டது. இதையடுத்து சபாநயாகர் தனபால் அவையை ஒத்திவைத்து விட்டு போய் விட்டார்.

தமிழகசட்டசபையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு வந்தது. ஆனால் வாக்கெடுப்பை ஒத்திவைக்க வேண்டும், ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று திமுகவும், ஓ.பி.எஸ் அணியும், காங்கிரஸும் வலியுறுத்தின. ஆனால் அதை சபாநாயகர் கேட்கவே இல்லை தொடர்ந்த மறுத்து வந்தார்.

இதையடுத்து திமுகவினரும், காங்கிரஸாரும், ஓபிஎஸ் அணியினரும் கொந்தளித்தனர். சபாநாயகர் முன்பு கூடி போராட்டத்தில் குதித்தனர். இதையடுத்து கலவரம் வெடித்தது. சபாநாயகர் இருக்கை தாக்கப்பட்டது. நாற்காலிகளைத் தூக்கி வீசினர்.
இதையடுத்து பிற்பகல் 1 மணி வரை சபையை ஒத்திவைத்து விட்டு அங்கிருந்து போய் விட்டார் சபாநாயகர் தனபால்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.