Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

February 19, 2017

முகம் தானம் பெற்று மாற்று ஆபரேஷன்... அமெரிக்காவில் சக்ஸஸ்..


அமெரிக்காவில் முகதானம் பெற்று இளைஞர் ஒருவருக்கு உறுப்பு மாற்று ஆபரேசன் வெற்றிக்கரமாக செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் மின்னெ கோட்டா மாகாணம் வுயோமிங் நகரை சேர்ந்தவர் ஆன்டி கான்ட்னெஸ் (31). கடந்த 2006-ம் ஆண்டு இவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலைக்கு முயன்றார். ஆனால் அவர் சாகவில்லை. ஆனால் முகம் சிதைந்து விட்டது. இதனால் மனம் வெறுப்படைந்து வாழ்ந்து வந்த அவர் டாக்டரிடம் ஆலோசனை பெற்றார்.

அப்போது மற்ற உறுப்பு போன்று முகத்தையும் தானம் பெற்று மாற்று ஆபரேசன் மூலம் சீரமைக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக அவர் காத்திருந்தார்.

இந்நிலையில் மின்னெ கோட்டாவைச் சேர்ந்த காலன் ரோஸ் என்பவர் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அவரது மனைவி லில்லியின் அனுமதி பெற்று அவரது முகம் தானமாக பெறப்பட்டது. இதையடுத்து இந்த முகமாற்று ஆபரேசன் மின்னெ சாட்டாவில் ரோஸ்செய்டர் நகரில் உள்ள மாபேயி கிளினிக்கில் நடந்தது.

இந்த ஆபரேசனை முகசீரமைப்பு சிறப்பு நிபுணர் டாக்டர் சமீர் மார்தானி நடத்தினார். ஆபரேசன் முடிந்து 3 வாரங்கள் கழித்து கண்ணாடியில் சான்ட்னெஸ் தனது முகத்தை பார்த்தார். அப்போது தனது முகம் முழுவதும் அழகாக மாறி இருப்பதை பார்த்து மகிழ்ச்சி அடைந்தார்.

கணவர் ரோசின் முகத்தை தனக்கு தானமாக அளித்த அவரது மனைவி லில்லிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.