Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

February 14, 2017

கூவத்தூர் களேபரம்.. ஆளுநரை ( மாநில காப்பாளர்) நேரில் சந்தித்து டிஜிபி ராஜேந்திரன் விளக்கம்


ஆளுநர் வித்யாசாகர் ராவை தமிழக சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி ராஜேந்திரன் திடீரென சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்

மிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவுடன் டிஜிபி ராஜேந்திரன் ஆலோசனை நடத்தி வருகிறார். சட்டம் ஒழுங்கு, தமிழகத்தில் நிலவும் அசாதாரண சூழல் குறித்து ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

தமிழகத்தில் ஆளும் கட்சியான அதிமுகவில் உட்கட்சி பூசல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. அ.தி.மு.க.வின் சட்டமன்றக் கட்சி புதிய தலைவராக எடப்பாடி பழனிச்சாமி இன்று தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார் எடப்பாடி பழனிச்சாமி. இதேபோல் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் ராஜ்யசபா எம்.பி. மைத்ரேயனும் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து பேசியுள்ளார்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் இன்று மாலை ஆளுநரை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார் டி.ஜி.பி. ராஜேந்திரன். இந்த சந்திப்பின் போது தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்தும், கூவத்தூரில் காவல்துறை மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து ஆளுநருக்கு டி.ஜி.பி ராஜேந்திரன் விளக்கமளித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.