February 28, 2017
சிதம்பரத்தில் தொண்டர்களுடன் புகைப்படம் எடுத்தார் விஜயகாந்த்
தேமுதிக தலைவர் விஜயகாந்த் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் சுற்றுப்பயணம் செய்து ‘உங்களுடன் நான்’ என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, தொண்டர்களைச் சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு விஜயகாந்த் சிதம்பரம் வந்து தங்கினார். பின்னர் அவர் நேற்று கடலூர் தெற்கு மாவட்ட தேமுதிக சார்பில் சிதம்பரம் சிவகாமிஅம்மை கலையரங்கத்தில் நடந்த ‘உங்களுடன் நான்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
அப்போது விஜயகாந்த் தொண்டர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
இந்த நிகழ்ச்சி காலை 10 மணி முதல் மதியம் 1 மணிவரை நடைபெற்றது. இதில் 500க்கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்து கொண்டு, தங்கள் குடும்பத்தினருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். நிகழ்ச்சியையொட்டி சிதம்பரத்தில் உள்ள முக்கிய பகுதிகளில் கட்சி கொடி, தோரணங்கள் கட்டப்பட்டிருந்தன. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தெற்கு மாவட்ட தேமுதிக. செயலாளர் சபா சசிகுமார் மற்றும் துணை செயலாளர் பாலு ஆகியோர் செய்திருந்தனர்
சிதம்பரத்தில் தொண்டர்களுடன் புகைப்படம் எடுத்தார் விஜயகாந்த்
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
February 28, 2017
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
February 28, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.