Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

February 11, 2017

பொறுமை இழந்த சசி எம்.எல்.ஏக்களுடன் ராஜ்பவன் செல்ல திட்டம் : போலீஸ் குவிப்பு, பரபரப்பு!


அ.தி.மு.க.,எம்.எல்.ஏக்கள் தங்கியுள்ள நட்சத்திர ஹோட்டலுக்கு சென்று ஆலோசனை நடத்திவரும் அ.தி.மு.க.,பொதுச்செயலாளர் சசிகலா அனைத்து எம்.எல்.ஏக்களையும் அழைத்து கொண்டு, ராஜ்பவன் சென்று கவர்னரை சந்திக்க திட்டமிட்டுள்ளார் என்ற தகவலையடுத்து ராஜ்பவனில் போலீஸ் பாதுகாப்பு அதிகப்படுத்தபட்டுள்ளது.

கவர்னரை சந்தித்து எம்.எல்.ஏக்கள் அனைவருடைய ஆதரவு என்னிடமுள்ளது என்னை முதல்வராக  பதவிப்பிரமாணம் செய்து வையுங்கள் என சசிகலா கோரி இரண்டு நாட்கள் ஆகியும் கவர்னர் மாளிகையில் இருந்து அழைப்பு வரவில்லை. இதில் அதிருப்தி அடைந்த சசிகலா இன்று இந்த அதிரடி முடிவை எடுக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

பதவியேற்பு நாள் தள்ளி போக போக தன்னிடமுள்ள எம்.எல்.ஏக்கள் ஒவ்வொருவராக முதல்வர் பன்னீர் செல்வத்திடம் சென்று வருவதால் அடுத்து இரண்டு நாட்கள் சென்றால் கூடாரம் காலியாகிவிடும் என்ற அச்சம் சசிகலாவிற்கு ஏற்பட்டுள்ளது.

கவர்னர் மாளிகையில் எம்.எல்.ஏக்கள் மெஜாரட்டியை காண்பிக்க அதிகாரம் இல்லை என்பதால் அதை தடுப்பதற்காகவே அதிக அளவில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.