Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

February 28, 2017

திருமண பந்தத்திற்கு வெளியே உறவில் ஈடுபட்ட ஜோடி! அதிரடி தண்டனை நிறைவேற்றம்


இந்தோனேசியாவில் திருமண பந்தத்திற்கு வெளியே உறவு வைத்துக்கொண்ட ஜோடிக்கு பொதுமக்கள் மத்தியில் கடுமையான தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
இஸ்லாமியர்களின் ஷரியா சட்டங்கள் நடைமுறையில் இருக்கும் ஆச்சே மாகாணத்திலே இத்தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.


இச்சட்டத்தை மீறி திருமண பந்தத்திற்கு வெளியே உறவில் ஈடுபட்ட ஜோடிகளுக்கு தலா 27 பிரம்படி நிறைவேற்றப்பட்டது.

ஆச்சே தலைநகரில் உள்ள மசூதிக்கு அருகே ஒரு மேடை அமைத்து பொது மக்கள் முன்நிலையில் பொலிசார் உதவியுடன் இந்த தண்டனை நிறைவேற்றப்பட்டள்ளது.
ஒருபால் உறவு, திருமண பந்தத்திற்கு வெளியில் உறவு, சூதாட்டம் போன்ற குற்றங்களுக்கு ஆச்சே மாகாணத்தில் கடுமையான தண்டனை அளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.