Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

February 13, 2017

தமிழக முதலமைச்சர் பன்னீர் செல்வம் உத்தமரா? - விகடன்


அ.தி.மு.க என்ற மிகப்பெரிய கட்சியில், 17 ஆண்டுகளுக்கும் மேலாக முக்கியப்பொறுப்புகளோடு வலம் வந்த பன்னீர் செல்வம், அந்தக் பன்னீர் செல்வம் கட்சியின் தலைமையால் நடத்தப்பட்ட முறைகேடுகளில் முக்கியப் பங்குதாரராக இருந்தாரா, இல்லையா?

வருவாய்த்துறை, நிதித்துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட துறைகளை தன்வசம் வைத்திருந்த பன்னீர் செல்வம் அங்கு நடந்த ஊழல்களுக்கு முக்கியக் காரணகர்த்தாவாகத் திகழ்ந்தாரா, இல்லையா?

பன்னீர் செல்வத்தின் தம்பி ராஜா, மகன் ரவீந்திரநாத்தின் வெளிநாட்டு முதலீடுகளுக்கு பன்னீர் செல்வம் அடித்தளம் அமைத்தாரா? இல்லையா?

கரூர் அன்புநாதன் வீட்டில் நடைபெற்ற ரெய்டுக்கும் பன்னீருக்கும் சம்பந்தம் இருந்ததா, இல்லையா?

தமிழகத்தின் மணல் குத்தகையை மொத்தமாக சேகர்ரெட்டிக்கு தாரைவார்த்து, தமிழகத்தின் ஆறுகளை கூறுபோட பன்னீர் செல்வம் உதவினாரா, இல்லையா? அதற்கு சேகர் ரெட்டியிடம் இருந்து பன்னீர் செல்வம் கைகளுக்கு கரன்சிகள் கடத்தப்பட்டதா, இல்லையா?

தேனியில் பால் பண்ணையும், டீக்கடையும் வைத்திருந்த பன்னீர் செல்வத்தின் இன்றைய சொத்து மதிப்பு 15 ஆயிரம் கோடிகளா? இல்லையா?

2016 சட்டமன்றத் தேர்தல் நேரத்தில் பன்னீர் செல்வம், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டவர்கள் வீட்டில் வருமானவரித்துறை சோதனை நடத்தியதா, இல்லையா? அதில் இருவரும் வசமாகச் சிக்கினார்களா, இல்லையா?

அதற்குப் பிறகு பன்னீரையும், நத்தம் விஸ்வநாதனையும் போயஸ் கார்டனில் வைத்து சசிகலா உருட்டுக் கட்டைகளின் உதவியோடு விசாரணை நடத்தினாரா, இல்லையா?

ஜெயலலிதா இறந்த பிறகு, மதுசூதனனை மறைத்து சசிகலாவை பொதுச் செயலாளராகக் கொண்டு வந்ததில் பன்னீர் செல்வத்துக்கு பங்கு இருந்ததா, இல்லையா?

போயஸ் தோட்டத்தில் வைத்து, ‘முதல்வர் பொறுப்பை ராஜினாமா செய்யுங்கள்’ என்று டாக்டர் வெங்கடேஷூம் டி.டி.வி.தினகரனும் பன்னீர் சொல்வத்தை மிரட்டியபோது, ‘துணை முதலமைச்சர் பதவியாவது கொடுங்கள்’ என்று பன்னீர் செல்வம் கேட்டாரா? இல்லையா?

இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் பதிலைத் தெரிந்துகொள்வதன் மூலமே உண்மையில் ஓ.பி.எஸ் உத்தமரா? என்பதைத் தெரிந்துகொள்ள முடியும்.

இவற்றை எல்லாம் தெரிந்துகொள்ள பன்னீரின் கடந்த காலத்துக்குள் கொஞ்சம் பயணம் செய்ய வேண்டும்; செய்வோம்!

- விகடன்

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.