Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

February 28, 2017

ரேஷன் கடைகளில் பாமாயில், துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு அடியோடு நிறுத்தம்!


நியாயவிலைக் கடைகளில் பாமாயில், துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு ஆகியவை அடியோடு நிறுத்தப்பட்டுள்ளது என்ற அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ள மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, நியாயவிலைக் கடைகளில் அத்தியாவசியப் பொருட்களை தடையின்றி வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகத்தில் உள்ள நியாய விலைக் கடைகளில் பாமாயில், துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு போன்றவை கடந்த சில மாதங்களாக சரிவர கிடைப்பதில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். அரசால் ரூ.30-க்கு வழங்கப்படும் பருப்புகளை நியாய விலை கடைகளில் இருப்பு இல்லாததால் ரூ.100 கொடுத்து தனியார் நிறுவனங்களில் வாங்கும் நிலைக்கு ஏழை மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.





தமிழகத்தில் மொத்தம் 33,973 நியாயவிலைக் கடைகள் உள்ளன. இவற்றின் மூலமாக 1.98 கோடி குடும்ப அட்டைதாரர்கள் பயன் அடைந்து வருகின்றனர். சமீப காலமாக தமிழகத்தின் பெரும்பாலான நியாயவிலைக் கடைகளில் மாதத்தின் முதல் மூன்று நாள்களில் மட்டும்தான் அனைத்துப் பொருள்களும் கிடைக்கிறது. அதன்பிறகு இருப்பு இல்லை என திருப்பி அனுப்பும் நிலை நிலவி வருகிறது. இதன்காரணமாக ஏழை மற்றும் நடுத்தர மக்கள் மாதத்தின் முதல் தேதி முதல், மூன்றாம் தேதிவரை காலை 6 மணி முதலே பெரும் கூட்டமாக நியாயவிலைக் கடைகளில் காத்துக்கிடக்கிறார்கள். இந்த மாதம் அத்தியாவசியப் பொருள்களான பாமாயில், துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு ஆகியவை அடியோடு நிறுத்தப்பட்டுள்ளது. அதேபோல தமிழக மக்கள் பெரிதும் பயன்படுத்தும் அரிசிக்குப் பதிலாக, கோதுமை மட்டும் வழங்கப்பட்டு வருகிறது.
எனவே, தமிழக ஏழை மற்றும் நடுத்தர மக்களின் சமையலறையில் பெரும்பங்கு வகிக்கும் நியாயவிலை பொருட்களை, நியாயவிலை கடைகளுக்கு மாதமாதம் சரியான முறையில் விநியோகம் செய்யவும், மாதத்தின் அனைத்து நாள்களிலும் அனைத்து பொருள்களும் இருப்பு வைக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தி உள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.