Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

February 22, 2017

சசிகலாவுடன் சமாதானம் – மீண்டும் அதிமுகவில் இணைகிறார் ஓ.பி.எஸ்?


முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை மீண்டும் அதிமுகவில் சேர்த்து கொள்வது குறித்து சசிகலா தான் முடிவெடுக்க வேண்டும் என தம்பிதுரை எம்.பி தெரிவித்தார்.
அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவுக்கு எதிராக போர் கொடி உயர்த்திய ஓ.பி.எஸ் தனது தலைமையில் தமிழகத்தில் ஆட்சி அமைக்க நினைத்தார்.
ஆனால் மன்னார்குடி கோஷ்டி பல குளறுபடிகள் செய்து அவர் ஆசையை கலைத்தது. சசிகலா ஆதரவு பெற்ற எடப்பாடி பழனிச்சாமி தமிழக முதல்வராக பதவியேற்றார்.
நேற்று செய்திளார்களிடம், பேசிய அதிமுகவை சேர்ந்த சசிகலா ஆதரவாளர் எம்.பி.தம்பிதுரை, எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தற்போது நிலையான ஆட்சி அமைந்துள்ளது. அதிமுகவை உடைக்க ஓ.பி.எஸ் சதி செய்தார். ஆனால் அவர் பக்கம் 10 எம்.எல்.ஏக்கள் மட்டுமே நின்றதால் அது அவரால் முடியாமல் போனது.
ஓ.பி.எஸ்ஐ மீண்டும் அதிமுகவில் சேர்ப்பது குறித்து சசிகலா தான் முடிவு செய்ய வேண்டும். அவர் முடிவை தான் நாங்கள் ஏற்று கொள்வோம் என்று கூறினார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.