Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

February 22, 2017

பார்ட்டிக்கு சென்ற இளம்பெண்! மர்மநபர் செய்த அட்டூழியம்! அம்மாடியோவ்!




மணிப்பூரை சேர்ந்த இளம்பெண் ஆதிஷா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவர் டெல்லியில் உள்ள கவுஜ் காஸ் என்ற கிராமத்தில் நடந்த உறவினர் வீட்டு விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்திருக்கிறார்.
கிராமத்தில் விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் வீடு திரும்பிக்கொண்டிருந்திருக்கிறார்.
அப்போது இரவு 11.30 மணியளவில் அவ்வழியாக வந்த பைக்கில் வந்த அடையாளம் தெரியாத ஒருவரிடம் உதவி கேட்டுள்ளார். அவருடன் ஆதிஷா பைக்கில் சென்றிருக்கிறார்.
அப்போது டெல்லியில் உள்ள மான் பூங்கா அருகே வரும் போது பைக்கை நிறுத்திய அந்த மர்ம நபர், ஆதிஷாவை பூங்காவிற்குள் வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதனை எதிர்பார்க்காத ஆதிஷா, அந்த மர்மநபரிடம் இருந்து தப்பித்து அருகில் இருந்த காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். ஆதிஷாவின் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
மேலும், விரைவில் அடையாளம் தெரியாத நபர் கைது செய்யப்படுவார் என்று அவர் கூறியுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.