Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

February 15, 2017

தனியார் விடுதியில் இருந்து எம்.எல்.ஏ.க்கள் வெளியேறுமாறு போலீஸ் உத்தரவு


சென்னை: கூவத்தூர் தனியார் விடுதியில் இருந்து எம்.எல்.ஏ.க்கள் வெளியேறுமாறு போலீஸ் உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோதமாக ரிசார்ட்டில் தங்கியுள்ளதால் உடனே வெளியேறுமாறு போலீஸ் வலியுறுத்தியுள்ளது. ரிசார்ட்டை சுற்றி கைத்தடிகளுடன் 600 போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் பதற்றம் நிலவி வருகிறது. விருப்பப்படியே ரிசார்ட்டில் தங்கி இருப்பதாக கூறி எம்.எல்.ஏ.க்கள் மறுப்பு தெரிவித்து வருகின்றனர். வெளியேற மறுக்கும் எம்.எல்.ஏ.க்களுடன் போலீஸ் அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அதிமுக எம்எல்ஏக்கள் கடந்த 7 நாட்களாக கூவத்தூரில் உள்ள தனியார் நட்சத்திர ரிசார்ட்டில் சசிகலா ஆதரவாளர்களால் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களை சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய 2 நாட்கள் சசிகலா நேரில் சந்தித்து ஆலோசனை நடத்திவிட்டு சென்றார். 3வது நாளாக நேற்று கூவத்தூர் ரிசார்ட்டுக்கு சசிகலா சென்றார். அப்போது, அவருக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பு நாளை (இன்று) வழங்கப்படும் என உச்சநீதிமன்றத்தில் பட்டியலிடப்பட்டது.  இதனால், சசிகலா போயஸ் கார்டனுக்கு திரும்பாமல் அங்கேய எம்எல்ஏக்களுடன் தங்கினார். தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கு தீர்ப்பு உச்சநீதிமன்றத்தில் இன்று காலை வெளியானது.

அதில் சசிகலா உட்பட 3 பேருக்கு நீதிபதி குன்ஹா வழங்கிய 4 ஆண்டு சிறை தண்டனை, தலா ரூ.10கோடி அபராதம் தீர்ப்பை உச்சநீதிமன்ற நீதிபதிகள் உறுதி செய்தனர். இது சசிகலா தரப்பினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குறிப்பாக கூவத்தூரில் சசிகலா தங்கியிருக்கும் ரிசார்ட்டில் பதற்றமான சூழ்நிலை நிலவியது. உடனடியாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் ரிசார்ட்டை சுற்றி குவிக்கப்பட்டனர். இந்நிலையில் எம்.எல்.ஏ.க்களை வெளியேற போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.

மின்சாரம் துண்டிப்பு

கூவத்தூரில் எம்.எல்.ஏ.க்கள் தங்கியுள்ள தனியார் விடுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் கூவத்தூரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.