February 2, 2017
சசிகலா சனியன் தான் ஜெயலலிதாவை கொன்றது: விக்கிப்பீடியாவில் சொல்றங்கோ
அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவுக்கு விக்கிபீடியாவில் தனி பக்கம் ஆரம்பிக்கப்பட்டு, அவர் குறித்து மோசமான கருத்துக்கள் பதிவேற்றம் செய்யப்பபட்டுள்ளது.
பொதுவாக ஒரு விஷயத்தை பற்றி தெரிந்து கொள்வதற்காக இயங்கும் வலைத்தளம் தான் விக்கிபீடியா.
இதில் யார் வேண்டுமானாலும் தங்களுக்கான பக்கத்தை தொடங்க முடியும். மேலும் இதை யார் நினைத்தாலும் எடிட் கூட செய்ய முடியும்.
உதாரணத்திற்கு கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை பதவியேற்ற போது மட்டும், அவரது பள்ளி தொடர்பான விவரங்களுக்காக அவர் குறித்த பக்கம் சுமார் 20 முறை எடிட் செய்யப்பட்டது.
தற்போது யாரோ சில விஷமிகள் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவின் பெயரில் ஒரு பக்கத்தை தொடங்கி, அதில் சசிகலா சனியன், ஜெயலலிதாவை கொன்றது சசிகலா போன்ற இழிவான விஷயங்களால் எடிட் செய்தனர்.
பின்னர் அது மாற்றப்பட்டு, நேற்று மட்டும் 50க்கும் மேற்பட்ட முறை சசிகலா விக்கிபீடியா பக்கம் எடிட் செய்யப்பட்டுள்ளது.
மேலும், சசிகலா தொடர்பான விக்கிபீடியா ஸ்கீரீன் ஷாட்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.
சசிகலா சனியன் தான் ஜெயலலிதாவை கொன்றது: விக்கிப்பீடியாவில் சொல்றங்கோ
Reviewed by மறத்தமிழன்
on
February 02, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
February 02, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.